சென்னை,மார்ச்.08- மும்மொழி கொள்கைக்கு ஆதரவாக வலுக்கட்டாயமாக பாஜகவினர் கையெழுத்து வாங்கிய சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
மும்மொழி கொள்கைக்கு ஆதரவாக பாஜக சார்பில் பல்வேறு இடங்களில் கையெழுத்து இயக்கம் நடத்தப்பட்டது இந்நிலையில் பள்ளி மாணவர்களை வலுக்கட்டாயமாக அழைத்து கையெழுத்து வாங்கிய பாஜகவினர் மீது மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் அளித்த புகாரின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு பாஜகவை சேர்ந்த 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பள்ளிக்கு செல்லும் மாணவர்களுக்கு பாஜகவினர் பிஸ்கட் கொடுத்து கையெழுத்து போட சொல்லும் வீடியோ ஒன்று வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.