இந்திய விமானப்படைக்கு 5 ரபேல் விமானங்கள் இம்மாத இறுதியில் வந்தடையும் என்று இந்திய விமானப்படை அறிவித்துள்ளது.ரபேலை விமானப்படையில் சேர்க்கும் பணி ஆகஸ்ட் மாதத்தில் நடக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இது போன்று நிகழ்வுகள் நடைபெறும் போது பாஜக அரசு மக்களை எப்படி எல்லாம் ஏமாற்றுகிறது என்பது தெரிகிறது.
இதை பார்க்கும் போது
- 2012 -பிரான்சிடம் இருந்து 126 ரபேல் போர் விமானங்களை வாங்க இந்தியா முடுவெடுத்து ஒப்பந்தம் போட்டது.அமேரிக்கா,ரஷ்யா போன்ற நாடுகளின் ஒப்பந்தங்களை நிராகரித்து,பிரான்ஸ் தேர்வு செய்யப்பட்டது.இது காங்கிரஸ் செய்த ஊழல் என்று பாஜக குற்றம் சாட்டி வருகிறது.
- 2014 -தேர்தலில் காங்கிரஸ் தோல்வியடைந்து பாஜக ஆட்சிக்கு வந்தது.இடையில் எந்த வித முன்னேற்றமும் இல்லாமல் ஒப்பந்தம் நிலுவையில் இருந்தது.
- 2015-ஏப்ரல் பிரதமர் மோடி பிரான்சிடம் இருந்து 126 ரபேல் போர் விமானங்களுக்குப் பதிலாக பறக்க தயாராக இருக்கும் வகையிலான 36 ரபேல் விமானங்களை உடனடியாக வாங்கப்படும் என்று அறிவித்தார்.
- 2016- ல் ரபேல் விமானங்களுக்கான ஒப்பந்தம் உறுதி செய்யப்பட்டது.அதன் படி 36 விமானங்கள் வாங்கப்படும் என்றும், 36 விமானங்களுக்கு ரூ.38 ஆயிரம் கோடி தருவதென ஒப்புக் கொள்ளப்பட்டது.இது காங்கிரஸ் 2012 யில் ஒப்பந்தம் போட்டப் போது ஒப்புக்கொண்ட மதிப்பை விட மூன்று மடங்கு அதிகாமாகும்.மேலும் அனில் அம்பானியை டசால்ட்ஸ் நிருவன இந்திய பங்குதாரராக தேர்வு செய்ததில் மோடி அரசின் பங்கு அதிகம் உள்ளதாக கூறப்பட்டது.
- 2016-ல் ரபேல் ஓப்பந்தம் ஆகி நாங்கு வருடங்கள் முடியப் போகிறது.
ஆனால் இது வரை எத்தனை விமானங்கள் வாங்கப்பட்டன..?,ஆனால் இந்திய விமானப்படையில் 5 ரபேல் விமானங்கள் வரப்போகிறது என்று பாஜக அரசு சொல்லும் போது இதில் எத்தகைய உண்மை உள்ளது என்று தெறியுமா..?.
கொரோனா வைரஸ் பரவிக்கொண்டு இருக்கும் காலத்தில் , இந்திய விமானப்படையில் 5 ரபேல் விமானங்கள் சேர்க்கப்படும் என பாஜக அரசு அறிவிக்கும் போது ,இந்த கொரோனா ஊரடங்கால் மக்கள் அவதிப்பட்டுக்கொண்டிருக்கும் நேரத்தில் கூட பாஜக அரசியல் செய்கிறது என்பது நிதர்சனமான உண்மை.