politics

img

கொடநாட்டில் கொடநாட்டில் பணத்தால் வாக்காளர்களை விலை பேசும் அதிமுக

நாமக்கல், ஏப். 14-ஜெயலலிதாவின் கொடநாடு பங்களாவில் கொள்ளையடித்த ரூ.2000 கோடி பணத்தையும் வைர நகைகளை மும்பை மார்க்கெட்டில் மாற்றி அந்தப் பணத்தையும் கொண்டுதான் தமிழகவாக்காளர்களை அதிமுக இன்றைக்கு விலை பேசி வருகிறது என திமுகதலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டினார்.தேர்தல் பிரச்சாரம் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்பட மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி தலை வர்கள் சூறாவளிப் பிரச்சாரத்தில் ஈடு பட்டுள்ளனர். இந்நிலையில் ஏப்ரல் 14 ஞாயிறன்று நாமக்கல்லில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் போட்டி யிடும் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் வேட்பாளர் சின்ராஜை ஆதரித்து நடைபெற்ற மாபெரும் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஆற்றிய உரையில், வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய் வதற்காக அதிமுக என்னென்ன தகிடுத்தத்தங்களைச் செய்கிறது என பட்டிய லிட்டார். அதை தேர்தல் ஆணையம் கண்டும் காணாதது போல் இருப்பதை சுட்டிக்காட்டி கண்டனம் தெரிவித்தார். இதுதொடர்பாக அவர் பேசியது வருமாறு:கொடநாடு பங்களா என்பது, அம்மையார் ஜெயலலிதா அவர்கள் ஓய்வெடுக்கக்கூடிய பங்களா. அங்கு 2000 கோடி ரூபாய் கொள்ளையடிக்கவும், எடப்பாடி, ஓ.பி.எஸ் அவர்கள் மற்றும் அமைச்சர்கள் எல்லாம் என்னென்ன தவறு செய்திருக்கின்றார்கள் என்பதை ஆவணமாக ஒரு பென் டிரைவில் வைத்திருந்தார் ஜெயலலிதா, அதனை கொள்ளையடிப்பதற்காகவும் கேரள மாநிலத்தில் இருந்து சயன் என்ற நபரை கூலிப்படைத்தலைவனாக கொண்டு வந்து அவன் மூலம் இதனை கொள்ளையடித்திருக்கின்றார்கள்.எங்கே அந்த 2000 கோடி ரூபாய் பணம்?சமீபத்தில் தில்லி, மும்பை போன்ற ஆங்கில ஊடகங்களில் எல்லாம் இந்த செய்தி வந்தது. மும்பை மார்க்கெட்டில் மாற்றப்பட்ட கோடிக்கணக்கான வைர நகைகளுக்கும், கொடநாட்டில் கொள்ளையடிக்கப்பட்ட பணத்திற்கும் தொடர்பு உண்டா? இதுதான் நான் கேட்கின்ற கேள்வி.அந்தப் பணத்தை வைரங்களாக மாற்றி வைத்திருந்தார்களா? அந்த வைரநகைகள் இப்பொழுது இந்த தேர்த லுக்காக வெளியில் வந்து இருக்கின்றது, காரணம், மீண்டும் அங்கு பணமாக மாற்றிஇருக்கின்றார்கள். இதை அரசாங்கம் கண்டுபிடிக்க வேண்டும். ஆனால் கண்டுபிடிக்க வாய்ப்பு கிடையாது. அதைக் கண்டுபிடிக்கச் சென்றால் இவர்கள் மாட்டிவிடுவார்கள். 


தேர்தல் கமிஷன் சாலையில் போகக்கூடிய வண்டிகளை நிறுத்தி, 5 லட்சம், 50 ஆயிரம் எடுத்துக் கொண்டு போகக்கூடிய வணிகப் பெருமக்களின் வண்டிகளை நிறுத்தி, குடும்பத்தோடு போகக் கூடியவர்களை நிறுத்தி, திருமணத்திற்காக கை செலவிற்கு எடுத்துக் கொண்டு போகக்கூடிய வண்டிகள் அனைத்தையும் நிறுத்தி சோதனை போடுகின்றீர்களே, இந்த வைர நகைகளை மாற்றிக்கொண்டு பணம் போய்க் கொண்டிருக்கிறது, அதை கண்டு பிடித்தீர்களா?உங்களுக்கு தெரியும், தெரிந்திருந்தும் கண்டும் காணாமல் இருப்பதற்கு காரணம். நான் பகிரங்கமாக குற்றம் சாட்டுகிறேன் அதற்கு காரணம் மோடி தான். நான் இன்னும் ஆதாரத்தோடு சொல்கின்றேன் சென்ற தேர்தலை நீங்கள் மறந்திருக்க மாட்டீர்கள். அப்பொழுது கரூரில், திருப்பூரில் கன்டெய்னர் பிடித்தார்கள். பல நூறு கோடி ரூபாய் அன்புநாதன் வீட்டில் ரெய்டு நடத்தி பிடித்தார்கள். அன்புநாதன் வீட்டில் அரசு ஆம்புலன்சும் இருந்தது, அதை வைத்து எடுத்துக்கொண்டு போன பண விவகாரங்கள் எல்லாம் வெளியில் தெரிந்தது. இதுநாள் வரையில் அது யாருடைய பணம்? எங்கிருந்து? எதற்காக வந்தது? எதற்காக பயன்படுத்தினார்கள்? என்ற செய்தி இதனால் வரையில் வெளியில் வந்து இருக்கின்றதா? என்றால் வரவில்லை.உலக அளவில் பிரபலமான வார பத்திரிகை தி வீக். அந்த தி வீக் பத்திரிகையில் இன்றைக்கு ஒரு செய்தி வந்திருக்கிறது. இதைக்கண்டித்து உண்மை வெளிவரவேண்டும் என்று நான் ஒரு அறிக்கை வெளியிட்டு இருக் கின்றேன். அது வெளியில்வரும். அதில் ஒரு செய்தி என்ன போட்டிருக்கின்றார்கள் என்றால், ஹஐஹனுஆமு ளயீநவே சுள 641 உசடிசந in 2016 வடி செiநெ வைள றயல யெஉம வடி யீடிறநச என்று தலைப்பு போட்டு தி வீக் என்கின்ற ஆங்கிலப் பத்திரிகையில் 4 பக்க செய்தி வந்திருக்கின்றது. சுருக்கமாக சொல்கின்றேன்.


அதிலென்ன வெளிவந்திருக்கின்றது என்றால், 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற பொதுத்தேர்தலில் 650 கோடி ரூபாய் கொடுத்து சட்டமன்றத் தேர்தலை விலைக்கு வாங்கி இருக்கின்றார்கள் என்று நான் சொல்லவில்லை. தி வீக் பத்திரிகை சொல்லுகின்றது. தி வீக் பத்திரிகை எங்கிருந்து இந்த ஆதாரத்தை திரட்டி வெளியிட்டு இருக்கின்றது என்றால், வருமான வரித் துறையிடம் இருந்து வாங்கி இருக்கின்றது. ஏனென்றால் வருமான வரித்துறை இது சம்பந்தமாக பல இடங்களில் ரெய்டு செய்து இருக்கிறது. அன்புநாதன் வீட்டில், செய்யாதுரை வீட்டில், இப்படி பல இடங்களில் சில நிறுவனங்களில், அதிலும் குறிப்பாக எஸ்.ஆர்.எஸ்.மைனிங் கம்பெனி, அங்கு வருமான வரித்துறை சோதனை செய்த போது சில ஆவணங்களை எடுத்திருக்கின்றார்கள். அவற்றையெல்லாம் வைத்துத்தான் பிரதமரிடம் கடந்த தேர்தலின் போது வருமான வரித்துறை ரிப்போர்ட் கொடுத்துள்ளது. நான் இன்னும் சொல்லுகின்றேன். கடந்த தேர்தலில் நாம் தோற்றோம், தோற்கவில்லை, தோற்கடிக்கப்பட்டோம். நமக்கும் அவர்களுக்கும் என்ன வித்தி யாசம் 1:1 சதவிகிதம் தான். அதில் சொல்கின்றார்கள், அதிமுகவேட்பாளர்களுக்கும், வாக்காளர் களுக்கும் தமிழகம் முழுவதும் மூன்று அமைச்சர்களை நியமித்து வினியோகம் செய்த ஆதாரங்களை வருமான வரித்துறை ரெய்டில் சிக்கியிருக்கின்றது. மூவர் கூட்டணியில் இருந்த மூன்று அமைச்சர்கள் யார் தெரியுமா, நத்தம் விஸ்வநாதன், வைத்தியலிங்கம், இப்பொழுது துணை முதலமைச்சராக இருக்கக்கூடிய ஓபிஎஸ். எஸ்.ஆர்.எஸ் மைனிங் கம்பெனி மூலம் அதிமுக வேட்பாளர்களுக்கு ஒவ்வொரு சட்டமன்ற தொகுதியிலும் 70 சதவிகித வாக்காளர்களுக்கும் பணம் கொடுத்து இருக்கும் ஆதாரங்கள் அனைத்தும் 2017ஆம் ஆண்டிலிருந்து அந்த பைல், ரெக்கார்ட், ஆதாரங்கள், ஆவணங்கள் அத்தனையும் பிரதமரின் அலுவலகத்தில் இருக்கின்றது, என்று நான் சொல்ல வில்லை, தி வீக் சொல்கின்றது. தி வீக் வாரப் பத்திரிகையும் வருமான வரித்துறை கொடுத்திருக்கக்கூடிய செய்திகளில் இருந்து எடுத்து வெளியிட்டு இருக்கின்றார்கள். எனவே இதையெல்லாம் மோடி அவர்கள் கையில் வைத்துக் கொண்டு இங்கு இருக்கக்கூடிய ஆட்சியை மிரட்டிக் கொண்டிருக்கிறார்.அதன் விளைவுதான் இப்போது அமைந்திருக்கக் கூடிய அதிமுக கூட்டணி.இவ்வாறு அவர் பேசினார்.

;