தஞ்சாவூர், ஏப்.18-தஞ்சை வல்லம் அருகே உள்ளதுமுன்னையம்பட்டி. வல்லம் திருச்சிசாலையில் அமைந்துள்ள முன்னையம்பட்டி 6 ஆவது வார்டில் 1500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்தப் பகுதியில் சாலை வசதி சரி இல்லாமலும், தண்ணீர் தொட்டியும் இடிந்து விழும் நிலையில் உள்ளது. குடிநீர் வசதி இல்லாததால் வல்லம் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிக்கு சென்று குடிநீர் கொண்டு வருகின்றனர். சாக்கடை சுத்தம் செய்யப்படாததால் தெருகளில் கழிவுநீர் தேங்கி நிற்கிறது. அருகில் உள்ள சமுத்திரகுளத்தில் செப்டிக்டேங்க், அருகில்உள்ள ரைஸ்மில் கழிவுகளும் கலப்பதால் வயதானவர்களும், குழந்தைகளும் நோயால் பாதிக்கபட்டுள்ளனர். இதன் பாதிப்பால் இதுவரை 5 பேர்நோயால் பாதிப்படைந்து இறந்துள் ளார்கள். அடிப்படை வசதிகள் செய்யப்படவில்லை என புகார் தெரிவித்தனர். இதனால் எந்த கட்சியை சேர்ந்தவர்களும் இப்பகுதிக்கு வாக்கு கேட்டு வரவில்லை என கூறப்படுகிறது. மேலும் இத்தொகுதியில் யார் வேட்பாளர் என தெரியவில்லை என இப்பகுதிமக்கள் தெரிவித்தனர். இதனை கண்டித்து வியாழக்கிழமை தேர்தலை புறக்கணிக்கப் போவதாக கூறி அப் பகுதி பெண்களும், ஆண்களும் ஏராளமானோர் வல்லம்- திருச்சி சாலையில் மறியல் போராட்டம் நடத்தினர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த வல்லம் காவல் அதிகாரிகள் மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் அப்பகுதிமக்கள், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆய்வு செய்து தங்கள் பகுதியின் குறைகளை சரி செய்ய வேண்டும் என தெரிவித்தனர். இதன் பின்னர் வாக்களிக்க சென்றனர்.