காந்திநகரில் தனக்கு ஒரு பிளாட் இருப்பதாகவும் அதன் மதிப்பு 25 லட்சம் ரூபாய் என்றும் அமித் ஷா கூறியிருக்கிறார். ஆனால் காந்திநகரில் ஒரு பிளாட்டின் விலை அரசாங்கத்தின் வழிகாட்டும் விதிகளின்படி சந்தை மதிப்பில் 66.5 லட்சம் ரூபாயாகும். அமித் ஷா பிளாட்டின் மதிப்பைக் குறைத்துக் காட்டியிருக்கிறார்.இவ்வாறு குறைத்துக் காட்டியிருப்பது மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் ஷரத்துக்களை மீறும் செயலாகும். இச்சட்டத்தின் 125ஏ பிரிவு, “ஒரு வேட்பாளர் தவறான தகவலை அளித்தால் அல்லது ஏதேனும் தகவல்களை மறைத்தால், அவர் அபராதம் மற்றும்/அல்லது சிறைத்தண்டனை விதிக்கப்படுவார்” என்கிறது. தேர்தல் ஆணையம் இதன்மீது உரிய நடவடிக்கை எடுத்திட வேண்டும். அமித்ஷா சாதாரண வேட்பாளர் அல்ல. அவர் ஒரு கட்சியின் தலைவர். அமித்ஷாவின் சொத்துக்கள் 2012க்கும் 2019க்கும் இடையே 11.79 கோடியிலிருநது 38.91 கோடி ரூபாயாக மும்மடங்கிற்கும் மேலாக உயர்ந்திருக்கிறது.