politics

img

சந்தேகம் சாமிக்கண்ணு

தமிழக அமைச்சர் ஜெயக்குமார் :- தமிழக அரசியலில் எது வேண்டுமானாலும் நடக்கலாம்.

ச.சா - மக்களோட துயரம் தீரும் நடவடிக்கை நடக்கணுமே..??

 

செய்தி : - காவி உடையில் திருவள்ளுவர் படத்தைப் போட்ட துணைக் குடியரசுத் தலைவரின் டுவிட்டர் பதிவில் படம் நீக்கம்.
ச.சா - இன்னும் பாஜக தலைவர் மாதிரியே இருக்காரோ..??
 

மத்திய அமைச்சர் அமித் ஷா :- குடியுரிமைச் சட்டத்தை மக்கள் ஆதரிக்க வேண்டும்.
ச.சா - தன்னோட கைய வெச்சே கண்ணக் குத்திக்குற ஏற்பாடோ..??
 

செய்தி :- மேற்கு வங்க பாஜக தலைவராக மீண்டும் திலீப் கோஷ் தேர்வு.
ச.சா - போராட்டக்காரர்கள நாய்ங்கனு சொன்னது கூடுதல் தகுதியாயிருச்சோ...??