வியாழன், செப்டம்பர் 23, 2021

politics

img

பொதுச் செயலாளர் மேசையிலிருந்து....

கடந்த மாதத்துடன் ஒப்பிடும் போது ஆகஸ்ட் மாதத்தில் 15 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் வேலைவாய்ப்புகளை இழந்துள்ளனர். முறைசார் மற்றும் முறைசாரா - ஆகிய இரு துறைகளிலுமே வேலை இழப்புநடந்துள்ளது. இந்திய பொருளாதார கண்காணிப்பு மையத்தின்விபரங்களின்படி, ஒரே மாதத் தில் தேசிய வேலையின்மை விகிதம் 6.9சதவீதத்திலிருந்து 8.32சதவீதமாக அதிகரித்துள் ளது. ஆகஸ்ட் மாதத்தில் நகர்ப்புற வேலையின்மை விகிதம் 9.78சதவீதமாக அதிகரித்துள்ளது. இரண்டாவது அலை கொரோனா பாதிப்பு துவங்குவதற்கு சற்று முன்பு மார்ச்மாதத்தில் நகர்ப்புற வேலையின்மை விகிதம் 7.27 சதவீதமாக இருந்தது. அதேபோல கிராமப்புற வேலையின்மை விகிதம் கடந்த மாதம் இருந்ததைவிட 1.3சதவீதம் அதிகரித்து 7.64 சதவீதமாக மாறியுள்ளது.

வேலைவாய்ப்பு விகிதம் வீழ்ச்சியடைந்துள்ள அதே வேளையில் ஆகஸ்ட் மாதத்தில்தொழிலாளர் சக்தியின் பங்களிப்பு விகிதம் அதிகரித்துள்ளது. இது, வேலைச் சந்தையில் பெரும் எண்ணிக்கையிலான தொழிலாளர்கள் இணைந்து கொண்டே இருக்கிறார்கள் என்பதையே காட்டுகிறது. ஜூலை மாதத்தில் ஏதேனும் ஒருவேலை கிடைக்காதா என்று தீவிரமாக தேடிக் கொண்டிரு ந்தவர்களின் எண்ணிக்கை 3 கோடியாக இருந்தது; ஒரே மாதத்தில் அது 3.6 கோடியாக அதிகரித்துள்ளது. இதன் பொருள் என்னவென்றால் ஒரே மாதத்தில் பல லட்சக்கணக்கானவர்கள் வேலை களை இழந்திருக்கிறார்கள் என்பதுதான். குறிப்பாக கிராமப்புற இந்தியாவில் மட்டும் ஒரே மாதத்தில் 15 லட்சத்திற்கும் அதிகமானவர்கள் வேலை களை இழந்திருக்கிறார்கள்.நமது கேள்வி, மோடி அரசு இதை அறிந்திருக்கிறதா; இதைப் பற்றி ஏதேனும் கவலைகொண்டிருக்கின்றதா என்பதுதான். 

                               ************** 

சமையல் எரிவாயு விலை புதனன்று 25 ரூபாய் உயர்த்தப்பட்டு மக்கள் மீது மற்றுமொரு தாக்குதல் தொடுக்கப்பட்டுள்ளது. இரண்டே மாதங்களில் மூன்றாவது முறையாக கடும் விலை உயர்வு, ஆகஸ்ட் 1, 18 
தேதிகளில் இதேபோல 25 ரூபாய் அதிகரிக்கப்பட்டது. இந்தஆண்டு ஜனவரி 1 முதல்இப்போது வரை ஒட்டுமொத்த மாக ஒரு சிலிண்டருக்கு ரூ.190 அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன் விளைவுகள் நிச்சயம் கடுமையானதாக இருக்கும். குடும்பங்களின் நிலை கடுமையாக பாதிக்கப்படும். 

                               ************** 

ஜிஎஸ்டி வரி வசூல் சாதனை அளவை எட்டிவிட்டதாக ஒன்றிய அரசுபெருமிதப்பட்டுக் கொண்டிருக் கிறது. ஆனால் உண்மையில் அதன் விளைவு, தினசரி விலை உயர்வுகள்; அதன் விளைவாக மக்களின் வாழ்வு சீர்குலைக்கப்பட்டிருக்கும் கொடுமை. இப்படித்தான் அதிகபட்ச வரி வசூல் நடந்திருக்கிறது. இதை மறைத்து பொருளாதார மீட்சியை உருவாக்கிவிட்டதாக படாடோப பிரச்சாரம்... என்னே மோடி! 

;