politics

img

பொதுச் செயலாளர் மேசையிலிருந்து...

வானளாவ உயரும் வேலையின்மை! டிசம்பர் 13 உடன் முடிவடைந்த வாரத்தில், இந்தியாவின் வேலையின்மை 10சதவீதமாக அதிகரித்துள்ளது. இது கடந்த 23 வாரங்களில் இல்லாத அதிகபட்ச அளவாகும். இதன் விளைவாக, அதிகரிக்கும் பசி! உயிர் வாழ்வதையே முடக்கும் துன்பங்கள் உச்சத்தில்! இவ்வளவு இருந்தும் வருமான வரம்புக்கு வெளியில் இருப்பவர்களுக்கு இலவச உணவும் நேரடி நிதி உதவியும் தர மறுக்கிறார் பிரதமர் மோடி. இதுகிரிமினல் குற்றம்! ஆனால் அதே வேளையில், 2004-2014 பத்து ஆண்டுகளில் ஒப்பிடும் பொழுது 2014-2019 ஐந்து ஆண்டுகளில் முதலாளிகளுக்கு தள்ளுபடி செய்யப்பட்ட வராக்கடன் 300% அதிகம். மிக மோசமான கூட்டுக் கொள்ளை களவாணிகளின் முதலாளித்துவம் இது. மோடி ஆட்சியின் முதல் ஐந்தாண்டுகளில் வங்கி கணக்குகளில் இருந்த மக்களின்  வாழ்நாள் சேமிப்புகள் இமாலய அளவுக்கு கொள்ளையடிக்கப்பட்டு உள்ளது. மக்களை கொள்ளை அடிப்பது; இந்தியாவை திவாலாக்குவது. இதுவே மோடி ஆட்சி!

                                       ************************

ஜம்மு - காஷ்மீர் மாவட்ட வளர்ச்சிக் கவுன்சில் தேர்தலில் ஐந்து இடங்களில் வென்றுள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அதற்காக உழைத்த தோழர்களுக்கு வாழ்த்துக்கள். ஒட்டுமொத்த மாநிலத்திலும் மகத்தான வெற்றி பெற்றுள்ள எதிர்க்கட்சிகளின் மக்கள் கூட்டணிக்கும் (குப்கார் கூட்டணி) வாழ்த்துக்கள். இந்தத் தேர்தலில் பாஜக அல்லாத கட்சிகள் பிரச்சாரம் செய்வது பல வஞ்சக வழிகளில் தடுக்கப்பட்டது. அதனையும் மீறி பாஜக அல்லாத கட்சிகள் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ளன. ஜம்மு-காஷ்மீர் மக்கள் மாவட்ட கவுன்சில் வளர்ச்சி தேர்தல்களில், 370வது பிரிவை நீக்கியதற்கு எதிராக தெளிவாக வாக்களித்துள்ளனர். காஷ்மீர் குறித்து ஏராளமான பொய் பிரச்சாரங்கள் செய்யப்பட்டன. அந்த மக்கள் மீது கடும் அடக்குமுறையும் துன்பங்களும் திணிக்கப்பட்டன. அப்படியிருந்தும் மக்கள் பா.ஜ.க.வை நிராகரித்துள்ளனர்.

                                       ************************

மோடி- ஷா இரட்டையர்கள் ஜனநாயகம் பற்றி வாய்கிழியப் பேசும் அதே நேரத்தில், தில்லியில் அவர்களின் குண்டர்கள், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆம் ஆத்மி கட்சியினரின் வீடுகளையும் அலுவலகங்களையும் தாக்குகின்றனர். அதுவும் புது தில்லியின் மையப்பகுதியில். இதற்கு அமித்ஷாவின் தில்லி காவல் துறையும் உடந்தை. தில்லி ஆளுநர் ஏன் வாய் மூடி மௌனியாக உள்ளார்?

                                       ************************

உடலை ஊசியால் குத்துவது போன்ற கடுமையான குளிரிலும் கூட லட்சக்கணக்கான விவசாயிகள் எஃகு போன்ற உறுதியுடனும் ஒற்றுமையுடனும் அமைதியாக போராடி வருகின்றனர். தில்லிக்கு அருகாமையில் உள்ள மாநிலங்களிலிருந்து மட்டுமல்ல, பல்வேறு பகுதிகளிலிருந்து ஆயிரக்கணக்கான விவசாயிகள் தலைநகரை நோக்கி வந்த வண்ணம் உள்ளனர். ஏற்கனவே 33 விவசாயிகள் உயிர்த் தியாகம் செய்துள்ளனர். மோடி அரசாங்கம் விவசாயிகளின் கோரிக்கைகளை ஏற்க வேண்டும். விவசாய சட்டங்களும் மின்சார சட்டத்திருத்தமும் திரும்பப் பெறப்பட வேண்டும். மத்திய அரசாங்கம் சம்பந்தப்பட்ட அனைவருடனும் விவசாய சீர்திருத்தங்கள் குறித்து விரிவாக விவாதிக்க வேண்டும். அதன் அடிப்படையில்தான் புதிய சட்டங்கள் நிறைவேற்றப் படவேண்டும்.

                                             +++++++++++++++++

தோழர் சீத்தாராம் யெச்சூரி  அவர்களின் கூடுதல் கருத்துக்களை காண கீழ் காணும் லிங்க்-கை கிளிக் செய்யவும்....

முகநூல் : https://www.facebook.com/ComradeSRY/

டுவிட்டர் : https://twitter.com/SitaramYechury

;