மீர்சுகைல் வரைந்துள்ள இந்த கேலிச்சித்திரத்திற்கு விளக்கமே தேவையில்லை.
******************
வேளாண் விரோத சட்டங்களால் பயனடையப் போவது யார்?
பதில் இதோ:
மிகப்பெரிய வேளாண் தளவாட மற்றும் போக்குவரத்து அமைப்புகளை கொண்ட அதானி போன்ற கார்ப்பரேட் நிறுவனங்கள் தான்! 2014, 2016, 2017, 2018 ஆகிய நான்கு ஆண்டுகளில் கவுதம் அதானி, வடமாநிலங்களில் 22 விவசாய சரக்குப் போக்குவரத்து மெகா நிறுவனங்களை உருவாக்கியுள்ளார். அதானி அக்ரி லாஜிஸ்டிக்ஸ் லிமிடெட் என்ற பெயரில் உருவாக்கப்பட்டுள்ள இந்த நிறுவனங்கள், வேளாண் உற்பத்தி எதிலும் ஈடுபடாமல், விவசாயிகளிடமிருந்து மிகப்பெருமளவு விளை பொருட்களை கொள்முதல் செய்து கொண்டுசெல்வதற்கான சரக்கு நிறுவனங்களாக மட்டும் உருவாக்கப்பட்டுள்ளன. இத்தகைய 22 அதானி நிறுவனங்களில் 20 மோடியின் ஆட்சி காலத்தில் உருவாக்கப்பட்டுள்ளன. இதையும், மோடி அரசின் புதிய வேளாண் சட்டங்களையும் இணைத்துப் பார்த்தால் உண்மை புரியும், மோடியின் அரசு கார்ப்பரேட்டுகளுக்கு மட்டுமே என்பது!
******************
இந்த பெரும் தொற்று காலத்திலும் மெகாபணக்காரர்களின் சொத்து பன்மடங்கு உயர்ந்துள்ளது. இந்தியாவில் மட்டும்தான் இந்த ஆண்டு ஜனவரி முதல் ஜுன் வரையிலான காலத்தில் புதிதாக 85 மகா கோடீஸ்வரர்கள் உருவாகியுள்ளனர். 1996க்குப் பிறகு முதன்முதலாக இந்த நிதி ஆண்டில்தான் ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான இரண்டு காலாண்டுகளில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி மிக மிக மோசமான நிலைக்கு வீழ்ந்துள்ளது. ஆனால் அதே நேரத்தில் கவுதம் அதானி மற்றும் முகேஷ் அம்பானி ஆகியோரது சொத்துக்கள் ஜெட் வேகத்தில் அதிகரித்துள்ளது. 2020டிசம்பர் துவக்கத்தில் கிடைத்துள்ள விபரங்களின்படி அதானியின் மொத்த சொத்து மதிப்பு ஆறு மடங்கு அதிகரித்துள்ளது. 2017ல் 5.37 பில்லியன் டாலராக இருந்த அதானியின் சொத்துக்கள் இப்போது 34 பில்லியன் டாலராக அதிகரித்துள்ளது. குறிப்பாக 2020 ஜுன் மாதத்திலிருந்து இருந்து மட்டும் மூன்றரை மடங்கு அவரது சொத்து மதிப்பு அதிகரித்துள்ளது. அம்பானியைப் பொறுத்தவரை 2017ல் 26.6 பில்லியன் டாலராக இருந்த மொத்த சொத்துக்கள் 2020 டிசம்பரில் 74.4 பில்லியன் டாலராக அதிகரித்துள்ளது. இவருக்கு 2020 ஜுனிலிருந்து மட்டும் 1.3 மடங்கு சொத்து அதிகரித்துள்ளது. ஒட்டுமொத்த இந்தியப் பொருளாதாரம் வீழும்போது மோடி அரசின் இந்தக் ட்டுக்களவாணிகளது சொத்து மதிப்புகள் மட்டும் அதிவேகத்தில் உயர்ந்தது எப்படி?தேசிய வளங்களை ஈவு இரக்கமின்றி கொள்ளை அடித்தது மோடியின் கூட்டுக் கொள்ளை களவாணிகளுக்கு செல்வத்தை அபகரிப்பதற்குதான் என்பது தெளிவு.
********************
சீத்தாராம் யெச்சூரி பதிவிடும் கருத்துக்கள் மற்றும் பதிவுகளை சமூக வலைத்தளங்களில் மேலும் படிக்க...
முகநூல் : https://www.facebook.com/ComradeSRY/
டுவிட்டர் : https://twitter.com/SitaramYechury