internet

img

பிரபலங்களின் ப்ளு டிக்கை நீக்கிய டிவிட்டர் நிறுவனம்!

பல பிரபலங்கள் மற்றும் அரசியல் தலைவர்களின் ப்ளு டிக்கை டிவிட்டர் நிறுவனம் நீக்கி உள்ளது.

டிவிட்டர் நிறுவனத்தை எலான் மஸ்க் வாங்கிய பின்னர், அந்நிறுவனத்தில் பல்வேறு அதிரடி மாற்றங்களை கொண்டு வரப்பட்டது. அந்த வகையில், சந்தா கட்டி ப்ளூ டிக் பெறும் மாற்றத்தையும் அவர் கொண்டு வந்தார். இந்த நிலையில், ரஜினி காந்த், ஷாருக்கான், மகேந்திர சிங் டோனி, விஜய் உட்பட ஏராளமான பிரபலங்களும், முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், ராகுல் காந்தி உள்ளிட்ட பல அரசியல் தலைவர்களும் தங்கள் டிவிட்டர் கணக்கில் ப்ளூ டிக்கை இழந்துள்ளனர். 

முன்னதாக டிவிட்டரில் அதிக பாலோயர்களை கொண்ட பிரபலங்களுக்கும், அரசியல் தலைவர்கள், விளையாட்டு வீரர்கள், நடிகர், நடிகைகள் ஆகியோருக்கு மட்டும் ப்ளூ டிக் வழங்கப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.
 

;