ட்விட்டரில், ட்வீட்களை குறிப்பிட்ட நேரத்திற்கு ஷெட்யூல் செய்து பதிவிடும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
ட்விட்டர் வெப் பதிப்பில், பயனர் எழுதும் ட்வீட்களை டிராப்ட் ஆக வைத்து கொள்ளும் வசதியும், எழுதி முடித்த ட்வீட்களை பின்னர் குறிப்பிட்ட நேரத்தில் பதிவு செய்ய ஏதுவாக ஷெட்யூல் செய்யும் வசதிகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. கடந்த நவம்பர் மாதம் முதல் இந்த அம்சத்தை பரிசோதித்து வருவதாக ட்விட்டர் நிறுவனம் கூறியுள்ளது. ஆனால் அது இப்போது தான் பயனர்களுக்குக் கிடைக்கிறது. இந்த அம்சங்கள் ட்விட்டர் வெப் மற்றும் மொபைல் வெப் பதிப்புகளில் வழங்கப்படுகிறது.
புதிய ஷெட்யூல் அம்சத்தில் ட்வீட் கம்போசர் அருகில் சிறிய காலெண்டர் ஐகான், எமோஜி பட்டன் அருகில் வழங்கப்படுகிறது. இதனை க்ளிக் செய்ததும், ட்வீட் செய்யப்பட வேண்டிய தேதி மற்றும் நேரத்தை தேர்வு செய்ய வேண்டும். ட்வீட்களை எழுதும் போது பாதியில் நிறுத்த வேண்டியிருந்தால் அவற்றை சேமித்து வைத்துக் கொள்ள வழி செய்கிறது. முன்னதாக இந்த அம்சத்தை இயக்குவது கடினமாக இருந்தது. தற்சமயம் இதனை இயக்க புதிதாக இரண்டு டேப்கள் வழங்கப்பட்டுள்ளன. இவற்றில் சேமிக்கப்பட்ட ட்வீட்களும், மற்றொன்றில் ஷெட்யூல் செய்யப்பட்ட ட்வீட்களும் இடம்பெற்றுள்ளன.