internet

img

டிவிட்டரின் லோகோவை மீண்டும் மாற்றிய எலான் மஸ்க்

டிவிட்டரின் லோகோவாக மீண்டும் நீல நிற பறவையை எலான் மஸ்க் மாற்றியுள்ளார்.

டெஸ்லா மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனர் எலான் மஸ்க் கடந்த ஆண்டு அக்டோபரில் 44 பில்லியன் டாலருக்கு டிவிட்டரை விலைக்கு வாங்கினார். இதைத் தொடர்ந்து  பல்வேறு அதிரடி மாற்றங்களை கொண்டு வந்த எலான் மஸ்க், கடந்த 4-ஆம் தேதி டிவிட்டர் செயலியின் லோகோவை திடீரென மாற்றினார். நீல நிற பறவைக்கு பதிலாக, மீம்களில் பிரபலமாக வலம் வரும் ஷிபா இனு வகை நாயின் முகத்தை புதிய லோகோவாக எலான் மஸ்க் அறிவித்துள்ளார். இந்த நிலையில், இன்று மீண்டும் நீல நிற பறவையை டிவிட்டரின் லோகோவாக எலான் மஸ்க் மாற்றியுள்ளார்.