கூகுளின் சர்வர் பிரச்சனையால் யூடியூப், ஜிமெயில் உள்ளிட்ட செயலிகள் நேற்று 2 மணி நேரம் முடங்கப்பட்டது.
கிழக்கு அமெரிக்காவிலும், ஐரோப்பிய நாடுகளில் சில பகுதிகளிலும் யூடியூப், ஜிமெயில் உள்ளிட்ட கூகுளின் செயலிகள் கிட்டத்தட்ட 2 மணி நேரத்திற்கு நேற்று முடங்கப்பட்டது. மேலும் கூகுள் க்ளவுட் (cloud) பயன்படுத்தும் ஸீனாப் ஷாட் உள்ளிட்ட சில செயலிகளும் சிறிது நேரம் முடங்கப்பட்டன.
இதுகுறித்து தெரிவித்துள்ள கூகுள் நிறுவனம், கிழக்கு அமெரிக்காவில் அதிக பயன்பாடு காரணமாக நிலவிய சர்வர் பிரச்சனையால் இந்த பாதிப்பு ஏற்பட்டதாக தெரிவித்துள்ளது.
இதே போல், கடந்த ஜூன் 1-ஆம் தேதி முதல் கூகுள் பிளே ஸ்டோரில் செயலிகளை பதிவிறக்கம் செய்யவோ, அப்டேட் செய்யவோ முடியவில்லை என்று உலகம் முழுவதிலும் சில பயனாளர்கள் தெரிவித்து வந்தனர். இந்நிலையில் அதுவும் சரி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.