கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து தகவல்களை திருடும் 24 சர்ச்சைக்குரிய செயலிகள் நீக்கப்பட்டுள்ளதாக கூகுள் அறிவித்துள்ளது.
சர்வர்கள், கம்யூட்டர்கள், ஸ்மார்ட்போன்களை தாக்கி செயலிழக்கச் செய்யவும், தகவல்களை திருடவும் மால்வேர்களை கொண்ட சாஃப்ட்வேர்களை ஹேக்கர்கள் உருவாக்கி வருகின்றனர். டிசிஎல் கார்ப்பரேஷனின் துணை நிறுவனமான ஷென்சென் ஹாக், கூகுள் பிளே ஸ்டோர் வழியாக 382 மில்லியன் ஒட்டுமொத்த பதிவிறக்கங்களுடன் 24 செயலிகளை வழங்கி வருகிறது. இந்த செயலிகள் ஆபத்தான அனுமதிகளைக் கேட்டன, சிலவற்றில் மால்வேர் மற்றும் ரோக்வேர் கூட இருந்தன. ரோக்வேர் செயலிகல் சிக்கல்களைக் கண்டறிந்து சரிசெய்வதாக பாசாங்கு செய்கின்றன, அதே நேரத்தில் பணம் செலுத்தும்படி அல்லது அதிக மால்வேரை சேர்க்கவும் உங்களை நம்ப வைக்க முயற்சிக்கின்றன.
இந்நிலையில், கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து தகவல்களை திருடும் 24 சர்ச்சைக்குரிய செயலிகள் நீக்கப்பட்டுள்ளதாக கூகுள் அறிவித்துள்ளது.