internet

img

குற்றச்சாட்டுகளுடன் 21 ஆண்டுகளைக் கடந்த கூகுள்

கடந்த செப்டம்பர் 27ஆம் நாளுடன் கூகுள் நிறுவனம் 21 ஆண்டுகளைப் பூர்த்தி செய்கிறது.கூகுளின் பிறந்த நாளே இதுவல்ல என்றும், 2005ஆம்ஆண்டு வரை கூகுள் தன் பிறந்தநாளை செப்டம்பர்7 ஆம் தேதியாகவும், 2005ஆம் ஆண்டிற்குப் பிறகு,செப்டம்பர் 8, செப்டம்பர் 26 என வேறு வேறு தேதிகளில் பிறந்த நாளை மாற்றி மாற்றி கொண்டாடியது.சமீபத்தில்தான் செப்டம்பர் 27 கூகுளின் பிறந்தநாளாக மாறியிருக்கிறது.

கூகுளின் நிறுவனர்கள் லேரி பேஜூம், செர்ஜி பிரின்னும் இணையதளங்களில் குவிந்திருக்கும் தகவல்களை எளிதாகக் கண்டறியும் வகையில் ஒருதேடு தளத்தை உருவாக்க வேண்டும் என்ற ஆய்வுமுயற்சியை 1996-ஆம் ஆண்டிலேயே தொடங்கினர்.அப்படி உருவாக்கப்பட்ட ஒரு தளத்திற்கு அவர்கள்சூட்டிய பெயர் BACKRUB. பின்பு அந்தப் பெயர் கூகுள் என்றானது. எண் 1ஐத் தொடர்ந்து 100 பூஜ்யங்கள் வந்தால் அதற்கு பெயர் GOOGOL என்று அழைக்கப்படுகிறது. கோடிக்கணக்கான தகவல்களிலிருந்து நமக்குத் தேவையானதைக் கண்டறிந்து தருவதால் கூகுள் என்ற பெயரை சூட்டினர்.உலகத்தில் அதிகம் பார்க்கப்பட்ட இணையதளம் என்ற பெருமையை கூகுள் பெற்றுள்ளது. இதற்குப் போட்டியாக உருவாக்கப்பட்ட பிங் (Bing)தேடல் தளத்தில் அதிகம் தேடப்பட்ட இணையதளப்பக்கமாக கூகுளே உள்ளது சுவாரஸ்மான தகவலாகும்.

கூகுள் என்ற டொமைன் பெயர் 1997ம் ஆண்டுசெப்டம்பர் 15ல் பதிவுசெய்யப்பட்டது. நிறுவனமாக1998ல் உருவானது. ஆரம்பத்தில் லேரி பேஜ் மற்றும்செர்ஜ் பிரின் ஆகியோர் கலிபோர்னியாவில் உள்ளஒரு நண்பரின் கேரேஜில் இதற்கான பணிகளைத் தொடங்கினர். ஸ்டான்போர்டில் படித்த சக பிஎச்.டி மாணவரான கிரேக் சில்வர்ஸ்டனை அவர்கள் தங்கள் முதல் பணியாளராக நியமித்தனர்.கூகுளின் தலைமை அலுவலகம் கூகுள் ப்ளெக்ஸ் என அழைக்கப்படும். இது கலிஃபோர்னியாவில் உள்ள சிலிகான் வேலியில் உள்ளது.‘தீமைகள் செய்ய வேண்டாம்’ என்பதைக் குறிக்கும் ‘டோண்ட் பீ ஈவில்’ என்பதையே கூகுள் நிறுவனம் தனது இலட்சணை வாசகமாகக் கொண் டுள்ளது.கூகுள் தேடல் தளத்தின் முகப்புப் பக்க பெயர்அன்றைய நாளின் சிறப்பைக் குறிக்கும் வகையில்படமாக வரையப்படும். இதற்கு கூகுள் டூடுல் என்றுபெயர். முதல் கூகுள் டூடுல் 1998 ‘burning man’ என்ற நிகழ்வுக்காக உருவாக்கப்பட்டது. ஜான் லெனனின் 70 வது பிறந்த நாளுக்கு வெளியான டூடுல் முதல் வீடியோ டூடுல் ஆகும்.

லெகோ எனப்படும் பிளாஸ்டிக் பொம்மை பாகங்களைக் கொண்டு செய்யப்பட்ட பெட்டியில்தான் கூகுளின் முதல் சர்வர் இடம் பெற்றிருந்தது.இந்த தலைமை அலுவலகம் மிகவும் பசுமையாக இருக்கும். அங்கே புல்லை சீர் செய்வதற்கு தோட்டக்காரர்களுக்கு பதிலாக ஆடுகள் இருக்கும்.தனது ஊழியர்களுக்கு விலையின்றி உணவுஅளித்த முதல் பெரிய தொழில்நுட்ப நிறுவனம்கூகுள் ஆகும். ஊழியர்கள் தங்கள் செல்லப்பிராணியான நாய்களைக் கொண்டுவரவும் இங்கே அனுமதி உண்டு.கூகுள் இமேஜ் எனப்படும் படங்களைத் தேடுவதற்கான வசதி 2001ஆம் ஆண்டு தொடங்கப்பட் டது. கூகுள் முதன்முதலில் தன்னுடைய மின்னஞ்சல்சேவையை ஏப்ரல் 1 ¬¬- 2004ஆம் தேதி ஜிமெயில்என்ற பெயரில் தொடங்கியது. ஏப்ரல் 1ஆம் தேதிஎன்பதால் அன்றைய நிலையில் யாகூ, ஹாட்மெயில்போன்ற மற்ற நிறுவனங்கள் 100 எம்பி அளவில் வழங்கிவந்த இருப்பிட வசதியை கூகுள் 1ஜிபி என்ற அளவில் தருவதாக சொன்னதை மக்கள் பலர்நம்பாமல் ஏமாற்று எனக் கருதினர்.மரியம் வெப்ஸ்டர் என்னும் அகராதியில் 2006ஆம் ஆண்டு கூகுள் என்னும் வார்த்தை இடம்பெற்றது. அதற்கு பொருள் கூகுளைப் பயன்படுத்திதகவலைத் தேடி பெறுதல் என இருந்தது.கூகுள் தன் வளர்ச்சிக்காக பல புதிய மற்றும்சிறிய நிறுவனங்களை விலைக்கு வாங்கி தன்னுடன் இணைத்துக் கொள்வதை வழக்கமாகக் கொண்டது. அந்த வகையில் பிரபலமாகிக் கொண்டிருந்த யூடியூப் வீடியோ தளத்தை 2006ல்  1.5 பில்லியன் டாலருக்கு வாங்கியது. தற்போது யூடியூப் 2 பில்லியன் மாதாந்திர பயனர்களைப் பெற்றுள்ளது.மேலும் 1 நிமிடத்திற்கு 400 மணிநேர அளவுள்ளவீடியோக்கள் பதிவேற்றப்படுவதாகக் கூறப்படுகிறது.2009ல் கூகுளின் ஒரு மென்பொறியாளர் தவறுதலாக “/” என்ற குறியீட்டை கூகுளின் தடை செய்யப்பட்ட இணையதளப் பதிவகப் பட்டியலில் இணைத்தார். பெரும்பாலான இணைய தள முகவரிகள் “/” குறியீட்டுடன் இருக்கும் என்பதால் ஒருஇணையதளத்தையும் கூகுள் வழியாகத் தொடர்புகொள்ள முடியாத நிலை ஏற்பட்டது. இதுபோன்ற பல பிரச்சனைகளை கூகுள் எதிர்கொண்டுள்ளது. கூகுளின் மீது எப்போதும் உள்ள ஒரு குற்றச்சாட்டு பயனரின் தனியுரிமை பற்றியது.

தனியுரிமை குற்றச்சாட்டுகள்
 கூகுள் சேவையை நாம் பயன்படுத்தும்போது கொடுக்கும் தகவல்கள் மட்டுமின்றி நாம் பயன் படுத்தும் கணினி, அதில் உள்ள வன்பொருட்கள், மென்பொருட்கள், இணைப்பு சாதனங்கள், இயங்குதளம், நெட்வொர்க், அலைபேசி எண் எனப் பலதரப்பட்ட தகவல்களையும் தன்னுடைய சர்வரில் சேகரிக்கின்றது. அதுமட்டுமல்லாமல், நாம் கூகுள் சேவையை பயன்படுத்தும்போது அதில்உள்ளிடும் தகவல்கள், காலண்டர் குறிப்புகள், பார்க்கும் தகவல்கள், பயணிக்கும் வழித்தடம்,  தனிப் பயன்பாட்டு எண்கள், குக்கீகள் வழியாக நாம் பார்த்த இணையதளங்கள் பற்றிய விபரங்கள் எனப் பலவும் திரட்டப்படுகின்றன.இத்தகவல்களைக் கொண்டு கூகுள் தனது சேவையை தரமாக்கப் பயன்படுத்துவதாகக் கூறுகிறது. ஆனால். அதனைப் பயன்படுத்தி ஒருவரின் தேவையை ஒற்றறிந்து விளம்பரங்களையும் வெளியிடுகிறது. கூகுளின் சேவைகள் பெரும்பாலும் அடிப்படையில் இலவசம் என்ற காரணத்தால் பலரும் இதுகுறித்து கண்டுகொள்ளாமல் இருக்கின்றனர். இதுவே இந்நிறுவனத்தின்அத்துமீறல்களுக்கு ஊக்கமளிப்பதாக அமைந்திருக்கிறது.சில நாட்களுக்கு முன்பு கூட கூகுளின் யூடியூப்சேவையில் குழந்தைகள் மற்றும் சிறார்கள் குறித்ததகவல்களை பெற்றோர் அனுமதியின்றி திரட்டியதாக குற்றம் சாட்டப்பட்டு கூகுள் நிறுவனத்திற்கு 170 மில்லியன் டாலர்கள் அபராதம் விதித்து அமெரிக்க பெடரல் வர்த்தக ஆணையம் உத்தரவிட்டுள்ளது. 13 வயதுக்கும் குறைவான சிறுவர்களின் தகவல்களைத் திரட்டுவது அமெரிக்காவில் சட்ட விரோதமாகும். 1998-ம் ஆண்டு முதல் இந்தத் தடைச் சட்டம்அமலில் உள்ளது. ஐரோப்பிய யூனியன் நாடுகளிலும், பயனாளர்களின் தனியுரிமைக் கொள்கைகளை மீறியதாக கூகுள் மீது குற்றச்சாட்டு உள்ளது.

====என்.ராஜேந்திரன்====

;