internet

img

சஃபாரி தேடு பொறியில் இருந்த பிழையை கண்டறிந்த கூகுள்!

ஆப்பிள் நிறுவனத்தின் சஃபாரி தேடு பொறியில், பல்வேறு பாதுகாப்பு குறைபாடுகள் இருப்பதாக கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஆப்பிள் நிறுவனத்தின் இணைய தேடு பொறியான சஃபாரி, கடந்த 2003 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தியது. இந்த தேடு பொறியில், பாதுகாப்பு குறைபாடுகள் இருப்பதை கூகுள் நிறுவனம் கண்டறிந்துள்ளது. இந்த குறைபாடுகள் பயனாளர்களின் தேடும் விவரங்களை மற்றவர்கள், எளிதில் கண்டறிய அனுமதிப்பதாகவும், அதிலும் முக்கியமாக தனிப்பட்ட தகவல்களை பாதுகாப்பதற்காக வடிவமைக்கப்பட்ட பொறிகளே, பயனாளர்களின் முக்கியமான தகவல்களை மூன்றாம் நபர்கள் அறிவதற்கு அனுமதிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த குறைபாடுகளை கடந்த ஆகஸ்ட் மாதத்தில் கூகுள் நிறுவனம் ஆப்பிள் நிறுவனத்திடம் தெரிவித்த நிலையில், டிசம்பர் மாதத்தில் குறைபாடுகள் சரிசெய்யப்பட்டு விட்டதாக ஆப்பிள் நிறுவன பொறியாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். இது குறித்த தகவல்களை அந்நிறுவன செய்தி தொடர்பாளர் ஒருவரும் உறுதி செய்துள்ளார்.

;