ஃப்ளிப்கார்ட் நிறுவனம் தனது செயலியில், புதிதாக இலவச வீடியோ ஸ்ட்ரீமிங் சேவையை தொடங்கியுள்ளது.
ஆன்லைன் வீடியோ ஸ்ட்ரீமிங் செய்யும் அமேசான் ப்ரைம் மற்றும் நெட்ஃபிள்க்ஸ் ஆகிய சேவைகள் போல தற்போது ஃப்ளிப்கார்ட் நிறுவனமும் புதிதாக வீடியோ ஸ்ட்ரீமிங் செய்யும் வசதியை அமல்படுத்தியுள்ளது. ஃபிளிப்கார்ட் செயலியில் அப்டேட்டாக இந்த வசதி வழங்கப்பட்டுள்ளது. புதிய அப்டேட்டான v6.17 மூலம் வாடிக்கையாளர்கள் இந்த சேவை பயன்படுத்த முடியும். மேலும், இந்திய வாடிக்கையாளர்களுக்காக இந்தி, தமிழ், கன்னடா உள்ளிட்ட மொழிகளில் விடியோ ஸ்ட்ரீமிங் செய்யப்படுகிறது. மேலும், இதில் டார்க் தீம் வழங்கப்பட்டுள்ளது.
கடந்த வாரம் வீடியோ சேவை குறித்து ஃப்ளிப்கார்ட் அறிமுகம் செய்தபோது சிறிது காலத்துக்கு ஃப்ளிப்கார்ட் ஒரிஜினல்ஸ் என எதுவும் வெளிவராது என அறிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.