internet

img

ஆண்ட்ராய்ட் டிப்ஸ் - என்.ராஜேந்திரன்

ஆண்ட்ராய்ட் கணக்கிலிருந்து வெளியேற

ஆண்ட்ராய்ட் ஸ்மார்ட் ஃபோனைப் பயன்படுத்த கூகுள் மின்னஞ்சல் கணக்கு அவசியம். வேறு ஃபோனைமாற்றுவதற்கு எண்ணியோ, வேறு கணக்கை உருவாக்க எண்ணியோ, அல்லது ஒன்றிற்கு மேற்பட்ட கூகுள் கணக்குகளை ஸ்மார்ட்ஃபோனில் பயன்படுத்தி வந்தாலோ அதிலிருந்து வெளியேறுவதற்கு என்ன வழிஎன்று பலரும் கேட்கிறார்கள். இதனை செயல்படுத்த ஆண்ட்ராய்ட் சாதனங்களில் எளிமையான வழி உள்ளது. செட்டிங்ஸ் மெனுவில் அக்கவுண்ட் என்பதில் சின்க் (ளுலnஉ) என்பதைக் கிளிக் செய்து நுழையவும். அதில் ஃபோனுடன் இணைக்கப்பட்டுள்ள கணக்கு விபரங்கள் பட்டியலிடப்படும். அதில் கூகுளைத் தேர்வு செய்து நுழைந்தால் உங்கள் ஜிமெயில் கணக்குகள் காட்டப்படும். அதில் நீக்க வேண்டிய மின்னஞ்சலைத் தேர்வு செய்யவும். அடுத்து வரும்திரையில் கூகுளில் நீங்கள் பயன்படுத்தும் சேவைகள் தொடர்பான பட்டியல் காட்டப்படும். அதில் காட்டப்படும் மெனுவிற்கான மூன்று புள்ளிகள் அல்லதுகோட்டை கிளிக் செய்தால் சுநஅடிஎந ஹஉஉடிரவே என்பதுகாட்டப்படும். அதைக் கிளிக் செய்தால் கணக்கிலிருந்து வெளியேறலாம்.


கூகுள் கண்காணிப்பைத் தவிர்க்க

உங்களின் தனிப்பட்ட சுதந்திரம் மற்றும் தகவல்களைப் பயன்படுத்துவதில் கூகுள், ஃபேஸ்புக் போன்ற டெக் நிறுவனங்கள் தங்கள் ஆதாயத்திற்காகவே அதிகம் செயல்படுகின்றன என்பது சமீப காலமாக அதிகரித்துவரும் குற்றச்சாட்டாகும். ஃபோன் செயல்பாடு, திருட்டுப் போதல், குழந்தைகள் பயன்படுத்துவதைக் கண்காணித்தல் போன்ற விஷயங்களில் இந்தக் கண்காணிப்பு நமக்கு அவசியப்படுகிறது. அதேநேரத்தில் அனைத்து தருணங்களிலும் நம்மை உளவுபார்க்கும் கருவி போலவே நம் கைபேசிகள் செயல்படுவது, மனரீதியான துன்புறுத்தல்களை நமக்கு இயல்பாகவே தரக்கூடியது. இது குறித்து ஐரோப்பிய நாடுகளில் பல சட்டங்கள் இயற்றப்பட்டுள்ளன. கூகுளின் கண்காணிப்பிலிருந்து தற்காலிகமாக வெளியேற நமக்கு சில வழிகள் கொடுக்கப்பட்டுள்ளன. அதனை எப்படி செயல்படுத்துவது என்பதைப் பார்ப்போம்.கூகுளின் மேம் சேவையுடன் இணைந்து லொக்கேஷன் ஹிஸ்டரி சேவையை தற்காலிகமாக முடக்கி வைக்கலாம். இதனை செயல்படுத்துவதற்கு செட்டிங்ஸ் பகுதியில் நுழைந்து அதில் கூகுள் என்பதைக் கிளிக் செய்யவும். தோன்றும் கணக்கு விபரங்கள் அடங்கிய பக்கத்தில் மேற்புறம் காட்டப்படும் தலைப்புகளில் டேட்டா & பர்சனலிசஷேசன் (னுயவய& ஞநசளடியேடளையவiடிn) என்பதைத் தேர்வு செய்யவும். அதில் ஆக்டிவிட்டி கண்ட்ரோல்ஸ் (ஹஉவiஎவைல ஊடிவேசடிடள) என்ற பகுதியில் காட்டப்படும் பட்டியலில் லொக்கேஷன் ஹிஸ்டரி (டுடிஉயவiடிn ழளைவடிசல) என்பதற்கு நேராக உள்ள பட்டனை நகர்த்தினால் நிறுத்தட்டுமா (ஞயரளந) என்று கேட்கும். அதனை உறுதிசெய்யவும். அதேபோல வெப் & ஆப் ஆக்டிவிட்டி (றுநb & ஹயீயீ ஹஉவiஎவைல) என்பதையும் ஆஃப்செய்யலாம். இது இணையம் மற்றும் ஆப் செயல்பாடுகள் குறித்த தகவல்களை பதிவு செய்யாமல் இருப்பதற்கானது. இந்த இரண்டையும் செயல்படுத்துவதன் மூலம் கூகுளின் கண்காணிப்பிலிருந்து தற்காலிகமாக விடுபடலாம்.


மொபைல் உரிமையாளர் விபரத்தைக் காட்ட

மொபைல் ஃபோன் தொலைந்துபோகும்போது யாரேனும் திருடிவிட்டார்களா என்று எண்ணுகிறோம். உண்மையில் நம்முடைய கவனக்குறைவு காரணமாக தவறவிடும் ஃபோன்களை எடுப்பவர்கள் அனைவரும் திருடர்கள் அல்ல. பெரும்பாலும் நல்லவர்களாகவே இருக்கின்றனர். ஃபோனின் லாக் ஸ்கிரீனை திறந்து உங்கள் விபரங்களை அறிந்து கொள்ள இயலாத சூழல் காரணமாகவோ, ஃபோன்கீழே விழுந்ததால் ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டதாலோ அல்லது உங்கள் ஃபோனை நீங்கள் தொடர்பு கொள்ளமுடியாத நிலையினாலோ ஃபோன் கிடைப்பதில் சிக்கல்ஏற்பட்டிருக்கலாம். அத்தகைய சூழலில் உங்களைத் தொடர்பு கொள்வதற்கு வசதியாக மாற்று எண் அல்லதுமுகவரியை லாக் ஸ்கிரீன் பகுதியில் தோன்றும்படிச் செய்தால் அவர்கள் உங்களைத் தொடர்பு கொள்ள வசதியாக இருக்கும். இதனை செயற்படுத்த உங்கள் ஃபோனின் செட்டிங்ஸ் பகுதியில் செக்யூரிட்டி பகுதி அல்லது சிஸ்டம் & டிவைஸ் பகுதியில் உள்ள லாக்ஸ்கிரீன் & பாஸ்வேர்ட் (டுடிஉம ளுஉசநநn & ஞயளளறடிசன) என்ற பகுதியில் நுழையவும். அதில் அட்வான்ஸ்ட் செட்டிங்ஸ் என்ற பகுதியில் சென்று லாக் ஸ்கிரீன் ஓனர் இன்போ (டுடிஉம ளுஉசநநn டீறநேசஐகேடி) என்பதை ஆன் செய்து கொள்ளவும். அத்துடன்உங்கள் பெயர், மாற்று தொடர்பு எண் வேண்டுமானால் முகவரி உள்ளிட்ட விபரத்தை பதிவு செய்து வெளியேறவும். இப்போது ஃபோனின் திரையில் நீங்கள் பதிவு செய்த விபரம் காட்டப்படும். இது ஃபோனைத்திறக்காமலே அவர்கள் உங்களைத் தொடர்பு கொள்ளஉதவும்.

;