டிவிட்டரில், கமெண்ட்களை மறைக்கும் ’ஹைட் ரிப்ளைஸ்’ (Hide Replies) என்ற வசதி உலகின் அனைத்து பயனர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
ஃபேஸ்புக், டிவிட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் பயனர்கள் பகிரப்படும் பதிவுகளுக்கு, ஒரு சிலர் பொருத்தமற்ற அல்லது எரிச்சலூட்டும் வகையில் பதில்கள் கமெண்ட்களை பதிவிடுவதுண்டு. இதுபோன்ற இன்னல்களை குறைக்கும் நோக்கில், ’ஹைட் ரிப்ளைஸ்’ என்ற புதிய அம்சத்தை டிவிட்டர் அறிமுகப்படுத்தி உள்ளது. இதன் மூலம், உலகின் அனைத்து பயனர்களுக்கும், தங்கள் பதிவுகளுக்கு வரும் கமெண்ட்களை மறைக்கும் வசதியை பயன்படுத்திக்கொள்ளலாம். இதற்கான சாம்பல் நிற ஐகானை கிளிக் செய்து ஹைட் ரிப்ளைஸ் அம்சத்தை இயக்க முடியும்.
இந்த அம்சம் டிவிட்டர் தளத்தில் ஆரோக்கியமான உரையாடல்களுக்கு வழிசெய்யும் என்றும், ஆண்ட்ராய்ட், ஐ.ஓ.எஸ், டிவிட்டர் லைட் ஆகிய தளங்களின் இந்த அம்சம் வழங்கப்பட்டுள்ளதாக டிவிட்டர் நிறுவனம் தெரிவித்தது.