இணையவழித் திருட்டைத் தடுப்பதற்காக, ஒரு ஊழியருக்கு மூவாயிரம் அமெரிக்க டாலர் (ரூ.2.08 லட்சம்) அளவுக்கு பன்னாட்டு நிதித்துறை நிறுவனங்கள் செலவிடுகின்றன. ஊழியர் எண்ணிக்கைப்படி பார்த்தால் ஜேபி மார்கன் சேஸ், எச்எஸ்பிசி ஹோல்டிங் ஆகிய நிறுவனங்கள் தலா 75 கோடி டாலர்களும், சிட்டி குழுமம், பேங்க் ஆஃப் அமெரிக்கா ஆகியவை தலா 60 கோடி டாலர்களும் 2018இல் டிஜிட்டல் பாதுகாப்பிற்காகச் செலவிட்டிருப்பதாகத் தெரிகிறது. பெரிய வங்கிகள் இணையப் பாதுகாப்பிற்கான ஒதுக்கீட்டை கடந்த 3 - 4 ஆண்டுகளில் மும்மடங்காக்கியுள்ளன. இணையவழித் தாக்குதல்களில் 19 சதவீதம் நிதித்துறையைக் குறிவைத்தே இருப்பதாக ஐபிஎம் நிறுவனம் தெரிவித்துள்ளது. ஆனால், இணையப் பாதுகாப்புக்கான செலவு உயர்ந்திருந்தாலும், உண்மையில் பாதுகாப்பு மேம்படவில்லை என்று டிலாய்ட் நிறுவனம் கூறியுள்ளது.
(எகனாமிக் டைம்ஸ்)