ஹேக்கர்கள் ஒரே மிஸ்ட் கால் மூலம் வாட்ஸ்அப்பில் ஊடுருவும் அபாயம் உள்ளதாகவும், அனைத்து பயனாளர்களும் உடனடியாக அப்டேட் செய்யும்படி அந்நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது.
உலக முழுவதும் 180 நாடுகளில் உள்ள 1.5 பில்லியன் மக்கள் வாட்ஸ்அப் செயலியை பயன்படுத்தி வருகின்றனர். இந்தியாவில் 20 கோடி பயனர்கள் இந்த செயலியை பயன்படுத்துகின்றனர். ஆடியோக்கள், வீடியோக்கள் உள்ளிட்ட தகவல்களை பாதுகாப்புடன் எளிதாகவும், வேகமாகவும் பரிமாறிக் கொள்ளும் வசதி வாட்ஸ்அப்பில் உள்ளதால் அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் தங்களது அதிகாரப்பூர்வ தகவல்களை வாட்ஸ்அப்பில் பரிமாறி கொள்கின்றனர்.
இந்நிலையில் வாட்ஸ்அப்பை பயன்படுத்தி, ஹேக்கர்கள் குறிப்பிட்டு வாட்ஸ்அப் எண்ணுக்கு, கால் செய்வதன் மூலம் அவர்களைக் கண்காணிக்கும் சாப்ட்வேரை மொபைலில் இன்ஸ்டால் செய்கிறார்கள். அதற்குப் பின் மொபைல் தொடர்ந்து ஹேக்கர்களால் கண்காணிக்கப்படும்.
இதை கண்டுபிடித்த வாட்ஸ்அப், புதிய வாட்ஸ்அப் அப்டேடை வெளியிட்டுள்ளது. இந்த புதிய வாட்ஸ்அப் அப்டேடில் அந்த ஹேக்கர்களிடம் இருந்து பாதுகாக்கும் அம்சம் உள்ளதாகவும், அனைத்து வாட்ஸ்அப் பயனாளர்களும் உடனடியாக அப்டேட் செய்துகொள்ளும்படி அந்நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது.