internet

img

பேஸ்புக் ஊழியர்களின் தரவுகள் கொண்ட ஹார்ட் டிஸ்க் திருட்டு

பேஸ்புக் நிறுவனத்தில் பணியாற்றிய சுமார் 29,000 ஊழியர்களின் தரவுகள் கொண்ட ஹார்ட் டிஸ்க் ஒன்று திருடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த திருடப்பட்ட ஹார்ட் டிஸ்க்கில், பேஸ்புக் நிறுவனத்தில் பணியாற்றும்  ஊழியர்களின் தனிப்பட்ட விபரங்கள் சேமிக்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் உள்ள தரவுகள் எதுவும் என்கிரிப்ட் செய்யப்படாத நிலையில் கார் ஒன்றிலிருந்து திருடப்பட்டுள்ளது. ஊழியர்களின் பெயர், வங்கி கணக்கு விபரம், சம்பளம் மற்றும் வழங்கப்படும் போனஸ் விபரம் என்பனவற்றுடன் சோசியல் செக்யூரிட்டி இலக்கத்தின் இறுதி நான்கு இலக்கங்கள் போன்ற பல்வேறு விபரங்கள் திருடப்பட்ட ஹார்ட் டிஸ்க்கில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. .இதனால் தரவுகளை இலகுவாகப் பெற்று தவறான முறையில் பயன்படுத்த முடியும் எனவும் அச்சம் வெளியிடப்பட்டுள்ளது. கடந்த 2018-ஆம் ஆண்டு அமெரிக்காவில் பணியாற்றியவர்களின் தரவுகள், இந்த ஹார்ட் டிஸ்க்கில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.