internet

img

கூகுள் மேப்பை மிஞ்சும் வகையில் புதிய மேப் சேவை - ஹூவாய் நிறுவனம் திட்டம்

கூகுள் மேப்பை மிஞ்சும் வகையில் ஹூவாய் நிறுவனம் அதன் புதிய மேப் சேவையை வரும் அக்டோபர் மாதம் வழங்கப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அமெரிக்கா மற்றும் சீனா ஆகிய நாடுகள் இடையே வர்த்தக போர் நிலவி வந்த நிலையில், அமெரிக்காவின் தொழில்நுட்ப நிறுவனங்களை சட்ட விரோதமாக சீனா நிறுவனங்கள் பயன்படுத்துவதாக கூறி அமெரிக்க அரசு ஹூவாய் நிறுவனத்தின் மீது தடை விதித்தது. இதை அடுத்து, அமெரிக்கா நிறுவனங்கள் ஹூவாய் நிறுவனத்தோடு செய்துள்ளது ஒப்பந்தத்தையும் நீக்குமாறு உத்தரவும் இருக்கின்றது. இதற்கிடையே ஹூவாய் நிறுவனம் கூகுள் நிறுவனத்தின் ஆண்ட்ராய்டுக்கு பதிலாக தனது சொந்த இயங்குதளமான ஹர்மனியை உருவாக்கியுள்ளது. 

இதை அடுத்து, கூகுள் மேப்பை மிஞ்சும் வகையில் ஹூவாய் நிறுவனம் புதிய மேப் சேவையான ”மேப் கிட்” சேவையை உருவாக்கி வருகின்றது. இதை வரும் அக்டோபர் மாதம், வெளியிட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த சேவை, வரும் ஆண்டு அக்டோபரில் வழங்கப்படும் என்று கூறப்படுகின்றது.