internet

img

கணினிக்கதிர் : 2 நாட்களில் போர்ட்... மின்னஞ்சலை அட்டாச் செய்யலாம்... கணிதப் புலியாக இரண்டு ஆப்கள்...

மொபைல் நிறுவனம் மாற  புதிய நெறிமுறைகள்
இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (TRAI) போர்ட் எனப்படும் ஒரு தொலைத்தொடர்பு நிறுவனத்திலிருந்து மற்றொரு நிறுவனத்திற்கு மாற தற்போது நடைமுறையில் இருக்கும் MNP விதிமுறைகளை மாற்றி புதிய நெறிமுறைகளை 2019 டிசம்பர் 16ஆம் தேதி முதல் அமல்படுத்தியுள்ளது.மொபைல் நம்பர் போர்ட்டபிலிட்டி (Mobile Number Portability) என்ற இந்த வசதியில் முன்பு வேறு நிறுவனத்திற்கு மாற ஒரு வாரம் வரை காத்திருக்க வேண்டியிருந்தது. அது தற்போது இரண்டு நாட்களாகக் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது,புதிய விதிமுறைகளில் செய்யப்பட்டுள்ள திருத்தங்களின்படி ஒரு பயனர், தான் வசிக்கும் பகுதியிலேயே உள்ள மற்றொரு நிறுவனத்திற்கு மாற விரும்பினால், கோரிக்கை வழங்கியதிலிருந்து மூன்று வேலை நாட்களுக்குள் செய்யப்படும். (முன்பு இது ஒரு வார காலமாக இருந்தது.) வேறு நகரம் அல்லது மாநிலப் பகுதிக்கு மாறுவதாக இருந்தால் ஐந்து வேலை நாட்கள் ஆகும்.

தொலைத்தொடர்பு நிறுவனத்தை மாற்ற விரும்புகிறவர்கள் பழைய முறையில் இருந்ததுபோலவே, யுபிசி எனப்படும் Unique Porting Code-ஐ ஜெனரேட் செய்யவேண்டும். போர்ட் என்று ஆங்கிலத்தில் பெரிய எழுத்தில் தட்டச்சு செய்து  ஒரு இடைவெளி விட்டு அவரின் மொபைல் எண்ணை டைப் செய்து ‘PORT <space> Xமொபைல்எண்X’ (உதாரணமாக ‘PORT 9999900000’) என்ற அடிப்படையில் 1900 என்கிற என்ணுக்கு குறுஞ்செய்தி (SMS) அனுப்ப வேண்டும்​.சந்தாதாரர் குறிப்பிட்ட மொபைல் எண்ணிற்கு கிடைக்கப்பெறும். போர்டிங் குறியீடு (யுபிசி) நான்கு நாட்களுக்கு மட்டுமே செல்லுபடியாகும். ஜம்மு-காஷ்மீர், அசாம் மற்றும் வடகிழக்கு பிராந்தியங்களில் இருப்பவர்களுக்கு கிடைக்கும் யுபிசி ஆனது 30 நாட்களுக்கு செல்லுபடியாகும். சந்தாதாரர்கள் கோரிக்கை படிவத்துடன் தங்கள் அடையாளச் சான்றையும் புதிய நிறுவனத்திற்கு சமர்ப்பிக்க வேண்டும். போஸ்ட்பெயிட் திட்ட வாடிக்கையாளர்கள் போர்ட் கோரிக்கையை உருவாக்கும் முன்பாக, தற்போதுள்ள மொபைல் நிறுவனத்தில் ‘நிலுவைத் தொகை’ இருப்பின் அதை முழுமையாக செலுத்தியிருக்க வேண்டும். சந்தாதாரர் தற்போதைய நெட்வொர்க்கில் குறைந்தது 90 நாட்களுக்கு இருந்திருக்க வேண்டும் என்ற முந்தைய நடைமுறை தற்போதும் தொடர்கிறது.\

மின்னஞ்சலையே அட்டாச் செய்து அனுப்பலாம்
புதிய வசதிகளை தரும் கூகுள் நிறுவனம் சமீபத்தில் கூகுள் மின்னஞ்சலில் பல ஸ்மார்ட் வசதிகளை அறிமுகப்படுத்தியது. அதன் தொடர்ச்சியாக புதிதாக நமக்கு வரும் மின்னஞ்சல்களை ஒவ்வொன்றாக ஒருவருக்கு ஃபார்வேர்டு செய்யாமல் அதனை அட்டாச்மெண்ட்டாக இணைத்து ஒரு மின்னஞ்சலாக அனுப்பும் வசதியை அறிமுகப்படுத்தியிருக்கிறது. இந்த வசதியைப் பயன்படுத்த நினைத்தால் கம்போஸ் மெயில் விண்டோவைத் திறந்து கொண்டு நீங்கள் அட்டாச்மெண்ட் செய்யவேண்டிய மின்னஞ்சல்களை ஒவ்வொன்றாக டிராக் அண்ட் டிராப் முறையில் இழுத்து கம்போஸ் விண்டோவில் விடவும். அல்லது அனுப்பவேண்டிய மின்னஞ்சல்களை டிக் செய்து தேர்வு செய்துகொண்டு மேலே காட்டப்படும் மெனு பட்டன்களில் கடைசியாக உள்ள மூன்று புள்ளிகளைக் கிளிக் செய்தால் கடைசியாக உள்ள forward as attachment என்பதைக் கிளிக் செய்தால் கம்போஸ் விண்டோ திறந்து மின்னஞ்சல்கள் இணைக்கப்படும். பெறவேண்டியவரின் மின்னஞ்சல் முகவரியையும் விபரத்தையும் குறிப்பிட்டு அனுப்பவும்.

இந்த முறையில் மின்னஞ்சல் இணைப்புக் கோப்புகள் .eml என்ற கோப்பு வடிவத்தில் இணைக்கப்படுகின்றன. இந்த வகை மின்னஞ்சல் கோப்பைத் திறக்க நேரடியாக அட்டாச்மெண்ட்டை கிளிக் செய்தால் பாப்அப் முறையில் ஒரு விண்டோ தோன்றி காட்டுகிறது. அட்டாச்மெண்ட் செய்யப்பட்ட .eml கோப்புகளைப் பதிவிறக்கியும் வைத்துக் கொண்டு மின்னஞ்சல்களைப் பார்க்க உதவும் எந்த பிரௌசரிலும் திறக்கலாம். இந்த வசதி மின்னஞ்சல்களைத் தொகுத்துவைத்துப் பாதுகாக்கவும், மற்றவர்களுக்கு முழு வடிவு மற்றும் உள்ளடக்கத்தை திருத்தம் செய்யாமல் அனுப்பவும் உதவிகரமாக இருக்கும்.

கணிதப் புலியாக வேண்டுமா­?
கணிதம் தொடர்பான ஆப்கள் பல பயன்பாட்டில் கிடைக்கின்றன. அவற்றில் ஒன்றாக மைக்ரோசாப்ட் நிறுவனம் கணிதத்தைக் கற்க விரும்புவோருக்கு நல்ல ஆப் ஒன்றை வடிவமைத்து Microsoft Math Solver என்ற பெயரில் அளித்துள்ளது. இந்த ஆப் பயன்படுத்தி  arithmetic, algebra, trigonometry, calculus, statistics உள்ளிட்ட பல வகைக் கணக்குகளை செய்ய முடியும். செயற்கை நுண்ணறிவு (AI)தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஆப் மூலம் ஒரு கணக்கை நேரடியாக உள்ளிட்டோ அல்லது காகிதத்தில் எழுதி அதனை படமாக எடுத்து OCR முறையில் மாற்றி கணிதத் தீர்வுகளைப் பெறலாம் என்பது கூடுதல் வசதியாகும். கணக்கின் தீர்வைக் காட்டுவதன், அது எப்படி வந்தது என்பதற்கான ஒவ்வொரு படி நிலையையும் வரிசையாகக் காட்டுகிறது. அத்துடன் முடிவுகளை வரைபடமாக விளக்கிக் காட்டும் கிராப் முறையும் வழங்கப்பட்டுள்ளது. மேலும் இதில் கணிதம் கற்பதற்கான தேர்வு செய்யப்பட்ட வீடியோ இணைப்புகளும் வழங்கப்பட்டுள்ளன. இந்த ஆப் கொண்டு கணிதத்தை எளிதாக மாணவர்கள் புரிந்து கொண்டு கற்றுக் கொள்வது எளிதாகும் என்று நம்பலாம். இந்த ஆப் கூகுள் பிளே மற்றும் ஆப்பிள்  ஸ்டோரிலும் கிடைக்கிறது.https://play.google.com/store/apps/details?id=com.microsoft.math
இந்த ஆப்பிற்கு நல்ல போட்டியாளராக Photomath என்ற மற்றொன்றும் உள்ளது. இந்த ஆப் அடிப்படைக் கணக்கு முதல் மேம்பட்ட பல கணித சூத்திரங்களின் அடிப்படையிலான கணக்குகள் வரை பலவற்றிற்கும் தீர்வுகள் தருகிறது. இதுவும் பயன்படுத்த சிறந்ததே.https://play.google.com/store/apps/details?id=com.microblink.photomath