இந்திய மொபைல்ஃபோன் சந்தையில் முன்னெப்போதும் இல்லாத கடும் போட்டி தற்போது நிலவுகிறது. நோக்கியா, சாம்சங், ஓப்போ, ஒன்பிளஸ்ஒன், எம்ஐ, மோட்டேரோலா, அசூஸ் உள்ளிட்ட பல பன்னாட்டு நிறுவனங்கள் புதிய மாடல் ஸ்மார்ட்போன்களை களமிறக்கி வருகின்றன. அதுவும் குறிப்பாக ஒவ்வொரு நிறுவனமும் குறைந்தது 2 முதல் 3 மாடல்களை ஒரே நேரத்தில் களமிறக்குகின்றன. புதிய ஃபோன் வாங்கவேண்டும் என்று நினைப்பவர்களுக்கு உங்கள் தேவையை நிறைவு செய்யும் ஃபோன் எதுவென்று பார்க்க இந்த பட்டியல் உதவக்கூடும்.
ரெட்மீ 7A
இந்தியாவின் முன்னணி பிராண்ட் ஃபோனாக வலம் வரும் எம்ஐநிறுவனத்தின் ரெட்மி வரிசையில் தற்போது ரெட்மீ 7A அறிமுகமாகியுள்ளது. இந்த 5A, 6A வரிசையில் வந்த முந்தைய ஃபோன்களில் இருந்துமூன்று புதிய அம்சங்கள் இதில் கூடுதலாக உள்ளன. ஹெட்போன்இணைக்காமல் FM கேட்கலாம். எழுத்துரு அளவை தேவைக்கேற்ப கூட்டிக்கொள்ளலாம். பேசும்போது கூடுதலாக ஸ்பீக்கர் ஒலியை கூட்டிக் கொள்ளலாம். இவற்றுடன், ஃபேஸ் அன்லாக் (AI Face unlock) வசதியும் உள்ளது. மற்ற விபரங்கள்: 5.45 இன்ச் IPS LCD HD டிஸ்பிளே, 1440×720 பிக்சல்கள் ரெசலியூசன், குவால்கோம் ஸ்நாப்ட்ராகன் 439 ப்ரோசசர், 4,000mAh பேட்டரி, ஆண்ட்ராய்ட் 9.0 பை இயங்கு தளத்தை அடிப்படையாக கொண்டு இயங்கும் MIUI 10 ஸ்கின் இயங்கு தளத்தில் இது இயங்குகிறது. 2ஜிபி ரேம்16 ஜிபி உள் நினைவகம் (விலை ரூ.5799) மற்றும் 3ஜிபி ரேம் 32ஜிபிஉள்நினைவகம் என இரண்டு வகைகள் உள்ளன. 11ஆம் தேதி முதல்ஆன்லைன் விற்பனை மூலம் கிடைக்கவிருக்கிறது.
ரெட்மீ கே20
இந்தியாவில் எம்ஐ நிறுவனத்தின் ஐந்தாம் ஆண்டு நிறைவு விழா கொண்டாட்டத்தையொட்டி வருகிற ஜூலை 17ஆம் தேதி ரெட்மீகே20 ப்ரோ (Redmi K20 Pro), ரெட்மி கே20 (Redmi K20) ஆகிய இரண்டுபோன்களும் வெளியாகின்றன. இந்த ரெட்மி கே20 சீரியஸில் வரும் ஸ்மார்ட்போன்கள் 6.39 இன்ச் டிஸ்பிளேவுடன், முன்புற திரையில் செயல்படக்கூடிய ஃபிங்கர் பிரிண்ட் சென்சார் இதில் பொருத்தப் பட்டுள்ளது. மூன்று பின்பக்க கேமராவும் ( 48MP+8MP+13MP), 20 எம்.பி.செல்ஃபி கேமராவும் உள்ளது. 4,000mAh பேட்டரி, ஸ்நாப்ட்ராகன் 855 ப்ரோசசர் இதில் உள்ளது.
ரியல்மீ X
ரெட்மீ ஃபோன்களுக்கு போட்டியாக வந்த ரியல்மீ ஸ்மார்ட்போனும் ஜூலை 15ம் தேதி ஆன்லைன் மூலமாக ரியல்மீ எக்ஸ் என்ற மாடலைஅறிமுகம் செய்கிறது. இதன் ஸ்பைடர்மேன் பதிப்பும் அன்றே வெளியாக உள்ளதாகத் தெரிகிறது.Realme X ஸ்மார்ட்போனில் 6.5 இன்ச் Full HD AMOLED டிஸ்பிளே உள்ளது. முன்புற திரையில் செயல்படக்கூடிய ஃபிங்கர் பிரிண்ட் சென்சாரும், 16 எம்.பி பாப்-அப் செல்ஃபி கேமராவும், 48 எம்.பி செயல்திறன் கொண்ட முன்பக்க கேமராவும் உள்ளன. குவால்கோம் ஸ்நாப்ட்ராகன் 710 ப்ரோசசரும், கூகுள் 9.0 பை பதிப்பும், ColorOS 6 இயங்கு தளத்துடன் இது வெளியாகிறது.ரியல்மி 3 லைட் என்ற மற்றொரு மாடலும் வரும் வாரத்தில் வெளியாக இருக்கிறது. இதில் 64 MP கேமரா மற்றும் 4230mAh பேட்டரியும் வர இருப்பதாகவும், ஜூலை 15 முதல் ஆன்லைனில் கிடைக்கும் என்றும் தெரிகிறது.
விவோ Z1 Pro
விவோ நிறுவனம் தனது புதிய ஸ்மார்ட்போனான ‘விவோ Z1 Pro’-வை அறிமுகப்படுத்தியுள்ளது. 4D வைப்ரேஷன், 3D சவுண்டுடன் கேம் மோட் 5.0 கொண்டுள்ளது. மல்டி-டர்போ அம்சம், சென்டர் டர்போ,AI டர்போ, நெட் டர்போ கூலிங் டர்போ, ART++ டர்போ என பல வசதிகள் இதில் உள்ளன. மேலும், கூகுள் அசிஸ்டன்ட்-கென ஒரு பிரத்யேக பட்டனும் இந்த ஸ்மார்ட்போனில் பொருத்தப்பட்டுள்ளது. இரண்டு நானோ சிம் வசதியும், ஆண்ட்ராய்ட் 9 பை இயங்குதளம், 6.53-இன்ச் FHD+ (1080x2340 பிக்சல்கள்) திரை, ஆக்டா-கோர் ஸ்னேப்ட்ராகன் 712 எஸ்ஓசி ப்ராசஸர் பொருத்தப்பட்டுள்ளது. மூன்று (16MP+8MP+2MP) பின்புற கேமராக்களையும், 32 மெகாபிக்சல் அளவில் ஹோல்-பன்ச் செல்பி கேமராவையும் கொண்டுள்ளது.5,000mAh பேட்டரி, 18W அதிவேக சார்ஜரையும் கொண்டுள்ளது. 14,990 ரூபாய் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ள இந்த மாடலில் 4GB ரேம் 64GB உள் நினைவக அளவை கொண்டுள்ளது. 6GB RAM + 64GB (ரூ.16,990) மற்றும் 6GB RAM + 128GB (ரூ.17,990) சேமிப்பு அளவுகளிலும் கிடைக்கிறது. இந்த மாடல் ஃப்ளிப்கார்ட் மற்றும் விவோ இந்தியா ஆன்லைன் தளங்களில் ஜூலை 11 முதல் கிடைக்கிறது. இந்த மாடல் சிறப்பம்சங்களை பார்க்கும்போது, சமீபத்தில் வெளியான சாம்சங் கேலக்சி M40, ரெட்மீ நோட் 7 Pro ஆகிய ஸ்மார்ட்போன்களுக்கு போட்டியாக அமைந்துள்ளது தெரிகிறது.விவோ Y12 என்ற மற்றொரு மாடலும் விற்பனைக்கு வந்துள்ளது.6.35 இன்ச் தொடுதிரை, மீடியாடெக் ஹீலியோ P22 (MT6762) பிராசஸர் 4 GB ரேம் 32 GB உள் நினைவகம், பின்புறம் 13 MP (f /2.2) + 2 MP + 8 MP (f /2.2) மூன்று கேமராக்களுடன் LED ப்ளாஷ் வசதியும்,16 MP செல்பீ கேமராவும் கொண்டுள்ளது. 5000 mAh பேட்டரி, ஆண்ராய்டுஓஎஸ், v9.0 (Pie) உள்ளது. விலை ரூ.12,490 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மற்ற தயாரிப்புகள்
LG W10 மற்றும் W30 வரிசையில் அடுத்ததாக W30 PRO என்றமாடலை எல்ஜி நிறுவனம் அறிமுகப்படுத்தவுள்ளது. V நாட்ச் டிஸ்பிளே,4000 mAh பேட்டரி, மூன்று பின்புற கேமராக்கள் போன்ற அம்சங்களுடன் இது வெளியாகவுள்ளது.அசூஸ் நிறுவனத்தின் ஜென் போன் வரிசையில் வெளிவந்திருக்கும் Zenfone Max Pro M2 பட்ஜெட் வரிசையில் முக்கியமானதாகும். 3 ஜிபி ரேம் 32 ஜிபி உள் நினைவகம் கொண்டது ரூ.9,999விலையில் ஆன்லைனில் கிடைக்கிறது. 5000mAh பேட்டரியும், விரைவாக சார்ஜ் செய்ய 10 வாட்ஸ் சார்ஜரும் உள்ளது. கொரில்லா கிளாஸ் 6 மற்றும் ஸ்னாப்டிராகன் 660 பிராசசர், 6.26 இன்ச் டிஸ்பிளே,பிங்கர் பிரிண்ட் சென்சார், ஃபேஸ் அன்லாக், 12 MP +5 MP சோனி கேமரா மற்றும் 13 MP செல்ஃபீ கேமராவும் கொடுக்கப்பட்டுள்ளது.சாம்சங், மைக்ரோமேக்ஸ், லாவா, 10.r, மோட்டோரோலா மற்றும்நோக்கியா போன்ற நிறுவனங்களும் தங்கள் பங்குக்கு புதிய ஃபோன்களை அறிமுகம் செய்துள்ளன. அனைத்து நிறுவனங்களுமே முன்னிலையில் உள்ள MI நிறுவனத் தயாரிப்புகளை மையப்படுத்தியே தங்களுடைய ஃபோன்களை களமிறக்கியுள்ளன என்பதை அதன் விலை மற்றும் வசதிகள் அடிப்படையில் பார்க்க முடிகிறது.அடுத்த 5 மாதங்கள் தொடர்ச்சியாக பண்டிகைக் காலமாக இருப்பதால் இன்னும் பல புதிய மாடல்கள் அறிமுகம் செய்யப்பட வாய்ப்புகள் இருக்கின்றன. விலையும் குறையலாம். அவசரம் இல்லை என்பவர்கள் காத்திருக்கலாம்.
===என்.ராஜேந்திரன்===