india

img

நாட்டில் முகக்கவசம் அணியும் பழக்கம் வெகுவாக குறைந்து விட்டது : நிதி ஆயோக் உறுப்பினர் தகவல்....

மும்பை 
ஒமைக்ரான் கொரோனா வைரஸால் இந்தியாவில் 3-வது ஏற்பட வாய்ப்புள்ளதாக ஒன்றிய அரசு சுகாதாரத்துறை மற்றும் மருத்துவ நிபுணர் குழு அவ்வப்போது எச்சரித்து வரும் நிலையில், இந்தியாவில் முகக்கவசம் அணியும் பழக்கம் வெகுவாக குறைந்து வருவதாக நிதி ஆயோக் உறுப்பினர் டாக்டர் வி.கே.பால் ஆதாரத்துடன்  கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது,"தடுப்பூசிகள் மற்றும் முகக்கவசம் இரண்டும் கொரோனா தடுப்பிற்கு முக்கியம் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். கொரோனா பாதுகாப்புத் திறனைப் பொறுத்த வரையில்  இப்போது ஆபத்தான மற்றும் ஏற்றுக்கொள்ள முடியாத அளவில் செயல்பட்டு வருகிறோம். கொரோனாவிற்கு எதிரான உலகளாவிய சூழ்நிலையிலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டும்"என   டாக்டர் வி.கே.பால் எச்சரித்துள்ளார்.

;