india

img

நடிகர் அமீர்கான்-கிரண் ராவ் விவாகரத்து குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு

மனைவி கிரண் ராவுடன் விவாகரத்து செய்வதாக இந்தி நடிகர் அமீர்கான் அதிகாரப்பூர்வ அறிக்கை வெளியிட்டுள்ளார். இந்தி திரைப்பட உலகின் முன்னனி நடிகர்களில் ஒருவரும் பல்வேறு தேசிய விருதுகளையும் பெற்றவர் நடிகர் அமீர்கான். 1986 ல் நடிகை ரீனா தத்தாவைத் திருமணம் செய்து கொண்ட இவர், 2002 ல் அவரை விவாகரத்து செய்தார். பின்னர் லகான் படத்தில் உதவி இயக்குநராகப் பணியாற்றிய கிரண் ராவை அமீர்கான் கான் 2005ல் காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு திருமணமாகி  15 ஆண்டுகள் ஆகும் நிலையில், இவர்களுக்கு ஆசாத் ராவ் கான் எனும்  மகன் உள்ளார்.

இந்நிலையில் நடிகர் அமீர்கான் மற்றும் கிரண் ராவ் இன்று ஒரு கூட்டு அறிக்கையை வெளியிட்டு உள்ளனர். அதில், சில காலத்திற்கு முன்பு நாங்கள் ஒரு திட்டமிட்டு பிரிந்தோம். இப்போது இந்த ஏற்பாட்டை முறைப்படுத்த வசதியாக உணர்கிறோம். தனித்தனியாக வாழ்வது, இன்னும் ஒரு நீட்டிக்கப்பட்ட விதத்தில் நம் வாழ்க்கையை பகிர்ந்து கொள்வது ஆகும். என தங்களது விவாகத்து குறித்த செய்தியை வெளியிட்டுள்ளனர்.  

 

 

;