india

img

இந்தியாவில் அதிக செலவாகும் நகரங்களின் பட்டியலில் மும்பை முதலிடம்!  

உலகின் அதிக செலவாகும் நகரங்களின் பட்டியலில் இந்திய அளவில் மும்பை முதல் இடத்தை பிடித்துள்ளது.  

ஒரு நகரத்தின் பணிபுரியும் ஊழியர்களின் வாழ்க்கை முறை, அந்த நகரத்தின் வளர்ச்சி ஆகியவற்றைக் கணக்கிட்டு தனியார் நிறுவனம் ஒன்று உலக அளவில் மிகவும் அதிகம் செலவாகும் நகரங்கள் குறித்த சர்வே ஒன்றை கணக்கிடப்பட்டுள்ளது. அந்த வகையில் ஊழியர்களின் அன்றாட வாழ்க்கை செலவு, வீட்டுவசதி, பாதுகாப்பு, சுகாதாரம், சுற்றுச்சூழல், கல்வி தரநிலைகள், நகரத்தின் நிர்வாகம் ஆகியவையும் கணக்கில் கொண்டு இந்த சர்வே எடுக்கப்பட்டுள்ளது.  

இந்த சர்வேயின்படி 2022 ஆம் ஆண்டில் உலக அளவில் அதிகம் செலவாகும் நகரங்களின் பட்டியலில் ஹாங்காங் முதலிடத்தை பெற்றுள்ளது.

இதனைதொடர்ந்து சூரிச் இரண்டாவது இடத்தையும் ஜெனீவா மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளது.

உலக அளவில் மிகவும் குறைவாக செலவாகும் நகரமாக அங்காரா நகரம் கடைசி இடத்தை அதாவது 227வது இடத்தை பிடித்துள்ளது.

இந்த பட்டியலில் இந்தியாவின் மும்பை 127வது இடத்தை பிடித்துள்ளது. தலைநகல் டெல்லி 155வது இடத்தை பிடித்துள்ளது. மேலும் பெங்களூரு 178வத இடத்தையும், ஹைதராபாத் 192வது இடத்தையும், புனே 201வது இடத்தையும் பிடித்துள்ளது. 

;