india

img

இந்திய ரூபாய் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சி!  

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு இன்று வரலாறு காணாத அளவு வீழ்ச்சியடைந்துள்ளது.  

சர்வதேச முதலீட்டு சந்தையில் உருவாகியுள்ள மந்த நிலையால், இந்திய சந்தையில் இருக்கும் அன்னிய முதலீடுகள் தொடர்ந்து வெளியேறி வருகிறது. இதனால் இந்தியாவின் அன்னிய செலாவணி இருப்பு குறைவது மட்டுமல்லாமல் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து சரிந்து வருகிறது. இந்திய பங்கு சந்தைகளில் தொடர் சரிவு காணப்படுகிறது.  

கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு வரை ஒரு அமெரிக்க டாலருக்கு 40 முதல் 45 ரூபாய் வரை இந்திய ரூபாய் மதிப்பு கடந்த சில வருடங்களாக கிடுகிடுவென உயர்ந்து தற்போது 70 ரூபாய்க்கும் அதிகமாக வந்துவிட்டது.  

அந்தவகையில் சர்வதேச அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின்  மதிப்பு 77.83ஆக சரிந்துள்ளது.

இந்திய பங்கு சந்தைகளில் உள்ள பங்குகளை வெளிநாட்டு முதலீட்டாளர்கள் தொடர்ந்து விற்பனை செய்து வருவதும், கச்சா எண்ணெய் விலை உயர்வும், உள்நாட்டு பணவீக்கம் அதிகரிப்பும் ரூபாய் மதிப்பு வீழ்ச்சிக்கு முக்கிய காரணங்களாக கூறப்படுகின்றன.