india

img

மும்பை பங்குச்சந்தையின் புதிய தலைவராக எஸ்.எஸ். முந்த்ரா நியமனம்  

மும்பை பங்குச்சந்தையின் புதிய தலைவராக எஸ்.எஸ்.முந்த்ரா நியமிக்கப்படுவதாக செவ்வாய்க்கிழமை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.  

மும்பை பங்குச்சந்தை பி.எஸ். போர்டு உறுப்பினர்கள் குழு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. அதில் செபியின் ஒப்புதலுக்கு உட்பட்டு ஒருமனதாக நிறுவனத்தின் இயக்குநர்கள் குழுவின் தலைவராக பொது நல இயக்குநர் எஸ்.எஸ்.முந்த்ராவை நியமிப்பதாக முடிவு செய்யப்பட்டுள்ளது.  

அதனால் நீதிபதி பிக்ரமஜித் சென்னுக்குப் பதிலாக சுபாஷ் ஷீயோரதன் என்ற எஸ்.எஸ்.முந்த்ரா பிஎஸ்இ தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.  

பூனா பல்கலைக்கழகத்தில் முதுகலை பட்டதாரியான முந்த்ரா, 2014 ஆம் ஆண்டு முதல் 2017 ஆம் ஆண்டுவரை ரிசர்வ் வங்கியின் துணை ஆளுநராக இருந்து ஓய்வு பெற்றார்.  

அதற்கு முன்பாக, பேங்க் ஆப் பரோடாவின் தலைவா் மற்றும் நிா்வாக இயக்குநராக பணியாற்றியவா். ஓஇசிடி-யின் நிதிக் கல்விக்கான சர்வதேச நெட்வொர்க்கின் துணை தலைவராகவும் முந்த்ரா இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

;