india

img

உன்னாவ் பெண்ணின் கடிதம்... விசாரணைக்கு கோகோய் உத்தரவு!

புதுதில்லி:
உத்தரப்பிரதேச மாநிலம், உன்னாவ் மாவட்டத்தைச் சேர்ந்த இளம் பெண், கடந்த ஞாயிறன்று கொலை முயற்சிக்கு ஆளானார். அவர் சென்ற கார் மீது, லாரியை வைத்து மோதி, கொலைமுயற்சி நடந்தது. இதில், இளம்பெண்ணின் தாயார் மற்றும் அவரது உறவினர் ஆகிய 2 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்து விட்டனர். இளம்பெண்ணும் அவரது வழக்கறிஞரும் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.தன்மீதான பாலியல் வல்லுறவு வழக்கிலிருந்து, தப்பித்துக் கொள்வதற்காக, பாஜக எம்எல்ஏ குல்தீப் சிங் செங்கார்தான், கொலை முயற்சியில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டுக்கள் எழுந் துள்ளன.இதனிடையே, கொலை முயற்சிஅரங்கேறுவதற்கு, 2 வாரங்கள் முன்னதாகவே, “எங்கள் உயிருக்கு ஆபத்து இருக்கிறது” என்று இளம்பெண்ணும், அவரது தாயாரும் உச்ச நீதிமன்றத் தின் தலைமை நீதிபதி, அலகாபாத் உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதிஉள்ளிட்டோருக்கு கடிதம் எழுதியிருந்தார் என்ற செய்தி ஊடகங்களில் வெளியானது. அப்போதே நடவடிக்கை எடுத்திருந்தால், 2 உயிர் களைக் காப்பாற்றியிருக்கலாம் என் றும் விவாதங்கள் எழுந்தன.இதையடுத்து, இளம்பெண்ணின் கடிதம் தனது கவனத்திற்கு கொண்டுவரப்படாதது குறித்து, உச்ச நீதிமன்றத்தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய்நீதிமன்றத்தில் கேள்வி எழுப்பியுள் ளார். மேலும், இதுகுறித்து ஒரு வாரத்தில் பதிலளிக்க வேண்டும் என உச்சநீதிமன்ற பதிவாளர் அலுவலகத்திற் கும் உத்தரவிட்டுள்ளார்.

;