india

img

மெஹுல் சோக்ஸி மீது மோசடி புகார் அளித்த யுனைடெட் பாங்க் ஆப் இந்தியா

பி.என்.பி  வங்கி மோசடியில் முக்கியக் குற்றவாளியாகக் கருதப்படும் மெஹுல் சோக்ஸி, 332 கோடி ரூபாய் மோசடி செய்துள்ளதாக யுனைடெட் பாங்க் ஆப் இந்திய அறிவித்துள்ளது.

பஞ்சாப் நெஷனல் வங்கியில் ரூ.13,000 கோடி மோசடி செய்ததாகா கீதாஞ்சலி நகை நிறுவன அதிபருமான மெஹுல் சோக்ஸியும், பிரபல வைர வியாபாரி நீரவ் மோடியும், குற்றம் சாட்டப்பட்டனர். இதை அடுத்து, மெஹுல் சோக்ஸி, கடந்த 2018 ஜனவரி மாதம், ஆண்டிகுவா & பார்படாஸ் நாட்டிற்குத் தப்பியோடிவந்து, அந்நாட்டின் குடியுரிமையைப் பெற்றிருந்தார்.  

இந்நிலையில், மெஹுல் சோக்ஸி, 332 கோடி ரூபாய் மோசடி செய்துள்ளதாக யுனைடெட் பாங்க் ஆப் இந்திய அறிவித்துள்ளது. மேலும், மெஹுல் சோக்ஸியின் மனைவி மற்றும் கீதாஞ்சலி நகை நிறுவனத்தின் இயக்குநர்களுக்கு கடன்களை திரும்ப செலுத்தும்படி, யுனைடெட் பாங்க் ஆப் இந்தியா நோடீஸ் அனுப்பி உள்ளது. 
 

;