2024-25 நிதியாண்டுக்கான ஒன்றிய அரசின் முழு பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று மக்களவையில் தாக்கல் செய்தார்.
முக்கிய அம்சங்கள்:
⦁ கல்வி, வேலைவாய்ப்பு, திறன் மேம்பாட்டுக்கு ரூ.1.48 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு!
⦁ வேளாண் துறைக்கு ரூ.1.5 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு.
⦁ உள்நாட்டில் உயர் கல்வி நிறுவனங்களில் மேற்படிப்பு பயில ரூ.10 லட்சம் கல்விக்கடன் வழங்கப்படும் என அறிவிப்பு.
⦁ பெண்கள், சிறுமிகளுக்கான நலத்திட்டங்களுக்காக ரூ.3 லட்சம் கோடி ஒதுக்கீடு.
⦁ ஆந்திர மாநில வளர்ச்சிக்காக ரூ.15,000 கோடி சிறப்பு நிதி ஒதுக்கீடு.
⦁ பிகார் மாநிலத்தில் ரூ.26,000 கோடி செலவில் 4 புதிய எக்ஸ்பிரஸ்வே சாலைகள் அமைக்கப்படும்.
⦁ பீகாரில் புதிய விமான நிலையம், மருத்துவக் கல்லூரி அமைக்க திட்டம்.
⦁ சிறு, குறு தொழில் (MSME) நிறுவனங்களின் வளர்ச்சிக்காக ரூ.100 கோடி நிதி ஒதுக்கீடு.
⦁ இந்தியாவில் உள்ள 500 டாப் நிறுவனங்களில் 1 கோடி இளைஞர்களுக்கு மாதம் ரூ.5000 ஊக்கத் தொகையுடன் கூடிய பயிற்சி அளிக்கப்படும்.
⦁ முத்ரா கடன் வரம்பு ரூ.20 லட்சமாக அதிகரிப்பு.
⦁ நகரங்கள், கிராமப்புறங்களில் மேலும் 3 கோடி வீடுகள் அமைக்கப்படும்.
⦁ ஊரகப் பகுதிகள் சார்ந்த திட்டங்களுக்கு ரூ.2.66 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு.
⦁ அசாம், இமாச்சல், உத்தரகண்ட் ஆகிய மாநிலங்களுக்கு ரூ.11,500 கோடி ஒதுக்கீடு