india

உயர்கல்வி நிறுவனங்களுக்கான வரைவு வழிகாட்டுதல் வெளியீடு

புதுதில்லி, ஜன. 28- இந்தியாவில் உள்ள உயர்கல்வி நிறுவனங்களில் எஸ்சி, எஸ்டி மற்றும் ஓபிசி பிரிவினருக்கான இட  ஒதுக்கீட்டை நீக்கி, இட ஒதுக்கீட்டின் கீழ் போதுமான விண்ணப்பதாரர் கள் இல்லாத பட்சத்தில் அந்த இடங்களை பொதுப்பிரிவின் கீழ்  நிரப்புவதற்கான வரைவு வழிகாட்டுதல்களை பல்கலைக் கழக மானியக் குழு (யுஜிசி) வெளி யிட்டுள்ளது. இதுதொடர்பாக பல்கலைக் கழக மானியக் குழு (UGC) வெளி யிட்டுள்ள அறிக்கையில், “உயர் கல்வி நிறுவனங்களில் நேரடி ஆட் சேர்ப்பில் நிரப்பப் படாத  எஸ்சி, எஸ்டி மற்றும் ஓபிசி பிரிவின ருக்கான இடஒதுக்கீடு செய்வதற்கு பொதுவான தடை விதிக்கப்படு கிறது.

ஆனால் அரிதான மற்றும் விதிவிலக்கான சந்தர்ப்பங்களில் “குரூப் ஏ” பதவியில் காலியாக இருக்கும் இடங்களை, பொது நலன் கருதி காலியாக இருக்க அனுமதிக்க முடியாது. சம்பந்தப் பட்ட பல்கலைக்கழகம் காலியிடத் தை நிரப்பும் பொருட்டு, இடஒதுக்  கீட்டை நீக்குவதற்கான முன்மொழி வைத் தயாரிக்கலாம். “குரூப் சி”  அல்லது “குரூப் டி” எனில் இட ஒதுக்கீட்டை நீக்குவதற்கான முன் மொழிவு பல்கலைக்கழக நிர்வாகக் குழுவிற்குச் செல்ல வேண்டும். “குரூப் ஏ” அல்லது “குரூப் பி” எனில் முழு விவரங்களையும் அளித்து கல்வி அமைச்சகத்திடம் சமர்ப்பிக்க வேண்டும். தேவை யான ஒப்புதல் பெற்ற பிறகு,  பணியிடத்தை நிரப்பி முன்பதிவு செய்யலாம்” என கூறப்பட்டுள்ளது.  

பதவி உயர்வு

மேலும், “பதவி உயர்வு ஏற்பட் டால், இடஒதுக்கீடு செய்யப்பட்ட காலியிடங்களில் பதவி உயர்வுக்கு தகுதியான எஸ்சி, எஸ்டி விண்ணப்ப தாரர்கள் போதுமான எண்ணிக்கை யில் இல்லை என்றால், அத்தகைய காலியிடங்கள் இடஒதுக்கீடு நீக்கப்பட்டு மற்ற பொது பிரிவுக்கு  என ஒதுக்கப்படும். இதுபோன்ற சந்தர்ப்பங்களில், இடஒதுக்கீடு செய்யப்பட்ட காலியிடங்களின் இட ஒதுக்கீட்டை நீக்குவதற்கு ஒப்புதல் அளிக்கும் அதிகாரம் யுஜிசி மற்றும் கல்வி அமைச்சகத்திடம் ஒப்படைக்கப்படும்” என பல் கலைக்கழக மானியக் குழு (UGC) வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.