india

21 மாநிலங்களில் இன்று முதற்கட்ட வாக்குப் பதிவு

புதுதில்லி, ஏப். 18 - 18வது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகளுக்கும், புதுச்சேரி ஒரு தொகுதி என 17 மாநிலங்கள் மற்றும் 4 யூனியன் பிரதேசங் களில் உள்ள 102 மக்களவை தொகுதிகளுக்கும் வெள்ளி யன்று நடைபெறவுள்ளது. அதே போன்று சிக்கிம், அரு ணாச்சலப்பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களுக்கும் சட்ட மன்ற தேர்தல் நடைபெறும் நிலையில், தமிழ்நாட்டின் விளவங்கோடு, திரிபுராவின் ராம்நகர் சட்டமன்ற தொகுதிக்கும் வெள்ளியன்று வாக்குப்பதிவு நடை பெறுகிறது.

முதல்கட்ட வாக்குப்பதிவு நடைபெறும் மாநிலங்களும் யூனியன் பிரதேசங்களும்
மாநிலங்கள்                           மொத்த தொகுதிகள்      முதல்கட்டம் 
1. தமிழ்நாடு    39    39
2. புதுச்சேரி    1    1
3. உத்தரப்பிரதேசம்    80    8
4. அசாம்    14    5
5. பீகார்    40     4
6. மத்தியப்பிரதேசம்    29    6
7. மேற்கு வங்கம்    42    3
8. மகாராஷ்டிரா     48    5
9. மணிப்பூர்    2     2
10. மேகாலயா    2    2
11. நாகாலாந்து    1    1
12. சத்தீஸ்கர்     11     1
13. மிசோரம்    1    1
14. ராஜஸ்தான்     25     12
15. சிக்கிம்     1    1
16. திரிபுரா     2    1
17. லட்சத்தீவு     1    1
18. உத்தரகண்ட்    5     5
19. ஜம்மு&காஷ்மீர்    5    1
20. அந்தமான்&நிகோபார்    1    1
21. அருணாச்சலப்பிரதேசம்    1    1

(வன்முறை பூமியாக காட்சியளிக்கும் மணிப்பூரில் முதல்கட்டமாக ஒன்றரை தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெறுகிறது. அதாவது முழுமையாக ஒரு தொகுதிக்கும், மற்றொரு தொகுதியின் 50% இடங்களுக்கும் வெள்ளியன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது)

சிக்கிம், அருணாச்சலப்பிரதேசம்
மக்களவைத் தேர்தலுடன் வடகிழக்கு மாநிலங்களான சிக்கிம், அருணாச்சலப்பிரதேசம் மாநிலங்களுக்கு சட்டமன்ற தேர்தல் நடைபெறுகிறது. 32 தொகுதிகளை கொண்ட சிக்கிம் மாநிலத்திலும், 60 தொகுதிகளை கொண்ட  அருணாச்சலப்பிரதேச மாநிலத்திலும் வெள்ளியன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

;