india

img

’மோடி ஒரு பிரிவினைவாதி’ - அமெரிக்காவின் டைம் இதழ் விமர்சனம்

அமெரிக்காவின் டைம் இதழின் அட்டை படத்தில், ’மோடி ஒரு பிரிவினைவாதி’ என்று விமர்சித்துள்ளது. 

அமெரிக்காவில் வெளியாகும் டைம் இதழ், கடந்த 2015-ஆம் ஆண்டில், பிரதமர் மோடியின் பொருளாதாரக் கொள்கைகளை விமர்சித்து கட்டுரை வெளியிட்டது. இந்நிலையில் மே 20-ஆம் தேதிக்கான இதழின் அட்டை பக்கத்தை இன்று வெளியிட்டது. அதில், காவித் துண்டு அணிந்து இருக்கும் மோடியின் படத்துடன் ’மோடி ஒரு பிரிவினைவாதி’ என்று விமர்சித்துள்ளது. 

இந்த தலைப்பானது இதழில் உள்ள ஒரு கட்டுரைக்கு பொருந்தும் வகையில் இடம்பெற்றுள்ளது. ’உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியா அடுத்த ஐந்தாண்டுகளும் மோடியின் ஆட்சியை சகித்து கொள்ளுமா?’ என்ற தலைப்பில் அந்த கட்டுரையில் எழுதப்பட்டுள்ளது. 

அதில் முன்னால் பிரதமர் ஜவகர்லால் நேருவின் மதச்சார்பற்ற கொள்கை இந்தியாவில் இணக்கமான சமூகத்தை உருவாக்கியதை கூறப்பட்டடுள்ளது மேலும் இந்து-முஸ்லீம் மதத்தினருக்கு இடையே இருந்த சகோதரத்துவமும் மோடியின் கொள்கையால் தரைமட்டமாகியதையும், குஜராத் வன்முறையை குறித்தும் ஆசிரியர் ஆதிஷ் தஸீர் தனது கட்டுரையில் கடும் விமர்சனங்களை வைத்துள்ளார்.


;