india

img

தீக்கதிர் விரைவுச் செய்திகள்

பசு குண்டர்கள் அட்டூழியம்
ஜெய்ப்பூர்:

ராஜஸ்தான் மாநிலம் ஆல்வார் மாவட்டம் ஷாஜகாபூரில் 2 ஜீப்புகளில்  பசு மாடுகளை கடத்திச்சென்றதாக கூறி, முன் பெத் கான் என்பவர் மீதுபசு குண்டர்கள் சரமாரியாக தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் படுகாய மடைந்த முன்பெத் கான் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

வெகுஜன வெறியாக  மாற்ற முயற்சி
புதுதில்லி:

அமெரிக்காவின் ஹூஸ்டன் நகரில் நடை பெற்ற ‘ஹவுதி மோடி’ நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, 370 ஆவது பிரிவை ரத்துசெய்து, ஜம்மு -காஷ்மீர்மாநிலத்தை யூனியன் பிரதேசமாக மாற்றியமைத்ததைக் குறிப்பிட்டு, அங்குகூடியிருந்த இந்தியர்களிடம் கைதட்டல்களைப் பெற்றார். இந்நிலையில், மோடியின் இந்த செயலைஇல்டிஜா முப்தி விமர்சித்துள்ளார். “காஷ்மீருக் கான 370-ஆவது பிரிவு ரத்துசெய்யப்பட்டது, காஷ்மீரைத் தவிர, மற்ற எல்லாஇடங்களிலும், புகழப்படுவது முரண்பாடாக இருக்கிறது” என்று அவர் குறிப்பிட்டுள்ளார். காஷ்மீர் மக் கள் ஒடுக்கப்படுவதை நியாயப்படுத்துவதற்கு, வெகுஜன வெறி, வெளிஇடங்களிலும் கூட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது” என்றும் சாடியுள்ளார்.

அதிகாரியை மிரட்டிய  பாஜக எம்எல்ஏ
லக்னோ:

மின்வாரிய இளநிலைபொறியாளர் ஒருவரை,பணியிட மாற்றம் செய்யுமாறு, ராம் கிஷோர் என்ற உயர் அதிகாரியை உத்தரப்பிரதேச பாஜக எம்எல்ஏசுரேந்திரா சிங் மிரட்டியுளார். இடமாற்றம் செய்வதில் உள்ள சிக்கல்களை கிஷோர் எவ்வளவோ விளக்கியும், அதை ஏற்றுக் கொள்ளாத சுரேந்திரா சிங், அதிகாரியை மிகமோசமான முறையில் வசைபாடவும் செய்துள்ளார். இதையடுத்து பாதிக்கப் பட்ட அதிகாரி, எம்எல்ஏ சுரேந்திரா சிங் மீது, காவல்துறையில் புகார் அளித்துள்ளார்.

;