ஒளிபரப்பு சேவை மசோதாவை மோடி அரசாங்கம் திரும்பப் பெற்றிருக்கிறது. ஒருமித்த கருத்துகளுக்கு பின்தான் மசோதா நிறைவேற்றப்பட வேண்டும். மோசமான மசோதாக்களை ஒருதலைபட்சமாக நாடாளுமன்றத்தில் நிறைவேற்றி விட்டு, பிறகு விவசாயச் சட்டங்கள் போல திரும்பப் பெறப்படும் போக்கு தற்போது முடிவுக்கு வந்திருக்கிறது. ஜுன் 4 அன்று வெளியான தேர்தல் முடிவு அதை உறுதி செய்திருக்கிறது.