india

கெஜ்ரிவால் ஜாமீன் வழக்கை ஒத்திவைத்த உச்சநீதிமன்றம்

மதுபான கொள்கை ஊழல் வழக் கில் சிறையில் அடைக்கப்பட்ட ஆம் ஆத்மி மூத்த தலைவரும், தில்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரி வால் மீண்டும் ஜாமீன் கோரி தொடர்ந்த  வழக்கில், தில்லி மாவட்ட நீதிமன்றம்  கடந்த வியாழனன்று ஜாமீன் வழங்கி யது. இதனை எதிர்த்து அதற்கு அடுத்த நாளே (வெள்ளியன்று) அமலாக்கத் துறை தில்லி உயர்நீதிமன்றத்தில் அவசர  மனு தாக்கல் செய்த நிலையில், இந்த வழக்கை விசாரித்த விடுமுறை கால உயர்நீதிமன்ற நீதிபதி சுதிர் குமார் ஜெயின் கெஜ்ரிவாலுக்கு வழங்கப்பட்ட ஜாமீனை நிறுத்தி வைத்தார். 

இதனை எதிர்த்து அரவிந்த் கெஜ்ரி வால் உச்சநீதிமன்றத்தில் மேல்முறை யீட்டு மனுதாக்கல் செய்தார்.இந்த மனு  திங்களன்று விசாரணைக்கு வந்த நிலை யில், வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற  நீதிபதிகள் மனோஜ் மிஸ்ரா - எஸ்.வி.என்  பாட்டி அடங்கிய அமர்வு,”கெஜ்ரிவால் ஜாமீன் வழக்கு தொடர்பாக உயர்நீதி மன்ற உத்தரவின் முழு விவரம் கிடைத்த  பின்பே மேல்முறையீட்டு மனு மீது முடி வெடுக்கப்படும். கெஜ்ரிவாலின் மேல் முறையீட்டு மனு மீதான விசாரணை ஜூன் 26 அன்று மீண்டும் நடைபெறும்” என கூறியது.