ஜனநாயகத்தை காக்க போராடும் எதிர்க்கட்சிகள் ஆளும் மாநில அரசுகளை விமர்சிக்க குற்றச்சாட்டுகள் எதுவும் இல் லாத காரணத்தினால் பிரத மர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா உள் ளிட்ட பாஜகவினர் வாரிசு அரசி யலை முன்னிலைப்படுத்தி அடிக்கடி விமர்சிப்பது வழக்கம். அதாவது வாரிசு அரசியலால் மாநிலம் (விமர்சிக்கப்படும் மாநிலம்) சீரழிந்துவிட்டது, வாரிசு அரசியலால் ஜனநாய கம் புதைந்த நிலையில் உள் ளது” என்று பிரதமர் மோடி அரசியல் ஆதாயத்திற்காக அடிக்கடி கொக்கரிப்பது வழக்கம். கிட்டத்தட்ட வாரிசு அரசியலுக்கு எதிரான பிம் பத்தை பிரதமர் மோடி உள்ளிட்ட பாஜகவினர் வெளிப்படுத்திக் கொண்டாலும், உண்மையில் எதிர்க்கட்சிகளை விட பாஜக தான் வாரிசு அரசியலில் பிழைப்பு நடத்தி வருகிறது. மக்களவை தேர்தலுக்கான பாஜகவின் இரண்டு கட்ட வேட்பாளர் பட்டியலில் 17 வாரிசுகளுக்கு பாஜக சீட் வழங்கியுள்ளது.
பாஜக தலைவர்களும், வாரிசுகளும்...
1. முன்னாள் முதல்வர் பிரேம் குமார் துமாலின் (இமாச்சல்) மகன் - அனுராக் தாக்கூர் (மோடிக்கு நெருக்கமானவர் - ஒன்றிய அமைச்சர்)
2. முன்னாள் முதல்வர் பி.எஸ்.எடியூரப்பாவின் மகன் (கர்நாடகா) - பி.ஒய்.ராகவேந்திரா
3. முன்னாள் எம்எல்ஏ ரவி சுப்ரமணியத்தின் மருமகன் (கர்நாடகா) - தேஜஸ்வி சூர்யா
4. முன்னாள் அமைச்சர் வேத் பிரகாஷ் கோயலின் மகன் (ஹரியானா) - பியூஷ் கோயல்
5. முன்னாள் அமைச்சர் ஏக்நாத் கட்சேவின் மருமகள் (மகாராஷ்டிரா) - ரக்ஷா கட்சே
6. முன்னாள் அமைச்சர் கோபிநாத் முண்டேவின் மகள் (மகாராஷ்டிரா) - பங்கஜா முண்டே
7. அமைச்சர் ராதாகிருஷ்ண வி.கே.பாட்டீலின் மகன் (மகாராஷ்டிரா) - சுஜோய் விகே
8. கே.பி.கிஷோர் தேப் பர்மன் (திரிபுரா) - கிருதி
9. சஞ்சய் தோத்ரே எம்பி மகன் (மகாராஷ்டிரா) - அனூப் தோத்ரே
10. முன்னாள் எம்பி துக்காராம் சிருங்காரேயின் மகன் (மகாராஷ்டிரா) - சுதாகர்
11. முன்னாள் அமைச்சர் அர்ஜுன் துளசிராம் பவாரின் மருமகள் (மகாராஷ்டிரா) - பார்தி பவார்
12. எம்எல்ஏ விஜய் காவித்தின் (மகாராஷ்டிரா) மகள் - ஹீனா காவித்
13. எம்பி மோகன் தெல்கரின் (தாத்ரா - நாகர் ஹவேலி) மனைவி - கலாபென் தெல்கர்
14. முன்னாள் அமைச்சர் ரத்தன் லால் கட்டாரியாவின் (ஹரியானா)மனைவி - பான்டோ கட்டாரியா
15. சசிகலா எம்எல்ஏவின் கணவர் (கர்நாடகா) - அண்ணாசாகேப் ஜொல்லே
16. முன்னாள் முதல்வர் எஸ்.ஆர்.பொம்மையின் மகன் (கர்நாடகா) - பசவராஜ் பொம்மை
17. முன்னாள் முதல்வர் மற்றும் முன்னாள் ஒன்றிய அமைச்சர் சுஷ்மா சுவராஜ் மகள்(ஹரியானா) - பன்சூரி சுவராஜ்