பாஜக ஆளும் உத்தரப்பிரதேச மாநிலம் சம்பலில் உள்ளது ஜமா மசூதி. இந்த மசூதி இந்து கோவிலை இடித்துக் கட்டப் பட்டது எனக் கூறி, மாநில அரசு அதிகாரி கள் நவம்பர் 24 அன்று ஆய்வு மேற்கொண் டனர். அவர்களுடன் இந்துத்துவா கும்ப லும் சென்றது. இந்த ஆய்வின் பொழுது நிகழ்ந்த வன்முறை யில் 5 பேர் கொல்லப்பட்டனர். பொதுச் சொத்துக்கள் சூறையாடப்பட்டன. மேலும் பல லட்சம் மதிப்பிலான பொ ருட்களுக்கு தீ வைக்கப்பட்டன.
இந்நிலையில், வன்முறைக்குப் பின் ஆய்வு என்ற பெயரில் சம்பலில் உத்த ரப்பிரதேச போலீசார் திங்கள்கிழமை அன்று சோதனை நடத்தினர். இந்த சோதனை முடிவில் சமாஜ்வாதி கட்சி எம்.பி., ஜியாஉர் ரஹ்மானின் வீட்டின் அருகிலுள்ள 3 வீடுகளில் ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகள் உள்ளிட்ட பொருட்கள் மீட்கப்பட்டதாகவும், சம்பல் வன்முறையில் ரஹ்மானுக்கு தொடர்பு இருப்பது போன்றும் உத்தரப்பிரதேச காவல்துறை கூறியுள்ளது. இதற்கு சமாஜ்வாதி கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.