india

img

மெகா சைஸ் “மன்னிப்பு விளம்பரம்” போலிச் சாமியார் ராம்தேவ் வெளியிட்டார்

பிரதமர் மோடியின் நெருங்கிய நண்ப ரும், போலிச் சாமியாருமான பாபா  ராம்தேவ் தனது பதஞ்சலி நிறுவனத் தின் வருமான சுயநலத்திற்காக ஆங்கில (அலோபதி) மருத்துவத்தின் தரத்தை சீர்  குலைக்கும் வகையில் விளம்பரம் வெளி யிட்டார். இதனை எதிர்த்து இந்திய மருத்துவ சங்கம் தொடர்ந்த வழக்கில் பதஞ்சலி நிறு வனர் ராம்தேவ் மற்றும் நிர்வாக இயக்கு நர் பாலகிருஷ்ணா ஆகியோர் பொது மன்  னிப்புக் கோர உச்சநீதிமன்றம் உத்தரவிட் டது. இதனையடுத்து பொது மன்னிப்புக் கோரி ஒரு சில ஆங்கில மற்றும் இந்தி  மொழி பத்திரிகைகளில் பதஞ்சலி நிறுவனம்  மிக சிறிய அளவிலான (3x10 அளவில்) விளம்  பரத்தை வெளியிட்டது. 

இந்நிலையில், பதஞ்சலி நிறுவனம் தொடர்ந்த வழக்கு உச்சநீதிமன்ற நீதிபதி கள் ஹிமா கோலி, அமானுல்லா அமர்வு  முன்பு செவ்வாயன்று மீண்டும் விசார ணைக்கு வந்த நிலையில்,”இது போன்ற சிறிய அளவில் தான் வெளியிடுவீர்களா? அவற்றைப் மைக்ரோஸ்கோப் வைத்து பார்க்  கும்படி சிறியதாக ஏன் கொடுத்தீர்கள்?” என சரமாரியாக கேள்வி எழுப்பி கடும் கண்டனம் தெரிவித்தனர்.

உச்சநீதிமன்ற கண்டனத்தால் அலறிய போலிச் சாமியார் ராம்தேவ் 67 தேசிய செய்தித் தாள்களில் “நிபந்தனையற்ற பொது  மன்னிப்பு” என்ற பெயரில் பொதுமன்னிப் புக் கேட்டு புதனன்று பெரியளவில் புதிய விளம்பரத்தை 4x25 அளவில் (கால் பக்கம்) இந்தி மற்றும் ஆங்கிலத்தில் வெளியிட்டார். அந்த விளம்பரத்தில்,”உச்சநீதிமன்றத்தில்  வழக்கு நடந்து வருவதை அடுத்து, உச்ச  நீதிமன்றத்தின் வழிகாட்டுதல்கள், ஆணை களுக்கு இணங்காததற்கு அல்லது கீழ்ப்படி யாததற்கு தனிப்பட்ட முறையிலும் நிறுவனத்  தின் சார்பாகவும் நிபந்தனையற்ற மன்னிப்  புக் கோருகிறோம்” என குறிப்பிடப்பட்டுள்ளது.

;