india

img

தனியார் மருத்துவமனைகளை நாட்டுடைமை ஆக்கிய ஸ்பெயின்... கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்த தற்காலிக ஏற்பாடு

புதுதில்லி:
கொரோனா தாக்கத்தை கட்டுப்படுத்தும் ஒருமுயற்சியாக, ஸ்பெயின் நாட்டு மருத்துவமனைகள் நாட்டுடைமை ஆக்கப்பட்டுள்ளன.கொரோனா பாதிப்பு குறைந்த பிறகு மீண்டும் இந்த மருத்துவமனைகள் தனியார் வசம்ஒப்படைக்கப்படும் என்று ஸ்பெயின் அரசு தெரிவித்துள்ளது. 

\கொரோனாவால் சீனாவுக்கு அடுத்து அதிகமாக பாதிக்கப்பட்ட நாடுகளில் ஸ்பெயினும் ஒன்றாகும். இங்கு 500-க்கும் மேற்பட் டோர் மரணம் அடைந்துள்ள நிலையில், பாதிப்புக்களை தடுக்க, பல்வேறு கட்ட நடவடிக்கைகளில் அந்நாட்டு அரசு தீவிரமாக இறங்கியுள்ளது.அந்த வகையில், ஸ்பெயின் பிரதமரான பெட்ரோ சன்செஸின் அறிவுறுத்தலின்படி, அந்நாட்டின் அந்நாட்டு சுகாதாரத் துறை அமைச்சர் சல்வடார் இல்லா அறிவிப்பு ஒன்றைவெளியிட்டுள்ளார். அதில், கொரோனா பாதிப்பின் காரணமாக ஸ்பெயின் நாட்டின் மருத்துவர்கள், மருத்துவமனைகள் அரசின் கட்டுப் பாட்டுக்குள் கொண்டு வரப்படுவதாக தெரிவித்துள்ளார்.

மருத்துவர்கள் மட்டுமல்லாமல், நான்காம்ஆண்டு மருத்துவ மாணவர்களும் உதவிக்காகஅழைக்கப்படுவார்கள் எனக் கூறியுள்ளசல்வடார், மருத்துவம் தொடர்புடைய பொருட் கள் தயாரிக்கும் தொழிற்சாலைகளுடனும் அரசு தொடர்பில் இருக்கும் என கூறியுள்ளார்.தனியார் மருத்துவமனைகளை நாட்டுடைமை ஆக்கிய ஸ்பெயின் அரசின் நடவடிக்கை, உலக நாடுகள் அளவில் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.இரவு - பகல் பாராமல் பணியாற்றி வரும்மருத்துவத் துறையினருக்கு தங்கள் வாழ்த்துக்களையும், நன்றிகளையும் தெரிவிக்கும் வகையில் ஸ்பெயின் மக்கள் தங்கள்வீட்டு ஜன்னல்கள் மற்றும் பால்கனிகளிலிருந்து கைகளைத் தட்டி உற்சாகப்படுத்தும் வீடியோ, அண்மையில் சமூக வலைதளங் களில் வெளியாகி பாராட்டைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

;