india

img

இரண்டு தடுப்பூசிகளைக் கலந்து பயன்படுத்த இந்திய மருந்து தரக் கட்டுப்பாடு ஆணையம் அனுமதி 

புதுடெல்லி : கொரோனா பெருந்தொற்றை கட்டுப்படுத்த நாடு முழுவதும் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகின்றது. இந்தியாவில் கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின் தடுப்பூசிகள் அதிகமாகச் செலுத்தப்பட்டு வருகின்றது. இந்த இரண்டு தடுப்பூசிகளுமே இரண்டு தவணை செலுத்தக்கூடிய தடுப்பூசிகள். இந்த தடுப்பூசிகள் , முதல் தவணை செலுத்திய பிறகு குறிப்பிட்ட இடைவெளிக்குப் பின்னரே இரண்டாம் தவணையைச் செலுத்தவேண்டும் என்ற கட்டாயம் உள்ளது. மேலும் , முதல் தவணை செலுத்திய அதே வகை தடுப்பூசிதான் இரண்டாம் தவணையிலும் பயன்படுத்தப்பட்டு வருகின்றது. இரண்டு தடுப்பூசிகளை மாற்றிச் செலுத்த இந்தியாவில் இதுவரை  பரிந்துரைக்கவில்லை. இந்நிலையில் ,கடந்த வாரம் , இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் ஆய்வு நடத்தியது. இந்த ஆய்வின் முடிவில் ,கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின் ஆகிய இரண்டு வெவ்வேறு தடுப்பூசிகளை இரண்டு தவணைகளில் மாற்றிச் செலுத்திக் கொண்டால் பாதுகாப்பானது என்றும் , மேலும் , அவை நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகப்படுத்திக்கறது என்றும் தகவலை வெளியிட்டது. இதன்படி, இந்தியாவில்  கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின் ஆகிய தடுப்பூசிகளைக் கலந்து செலுத்த இந்திய மருந்து தரக் கட்டுப்பாடு ஆணையம் அனுமதியளித்துள்ளது.   

;