india

img

தமிழகத்திற்கு ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை - இந்திய வானிலை ஆய்வு மையம் 

குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி தீவிரமடைந்துள்ளதால் தமிழ்நாட்டிற்கு ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கையை இந்திய வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது.

தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய இலங்கை கடலோர பகுதிகளில் நிலவி வரும் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி, தமிழ்நாட்டை நோக்கி நகர்கிறது. இதன் காரணமாகத் தமிழ்நாட்டில் அடுத்த மூன்று நாட்களுக்குக் கனமழை பெய்யக் கூடும் எனவும், ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கையையும் இந்திய வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது.

இதன்படி கடலோர மாவட்டங்களான சென்னை, தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, நாகை, புதுக்கோட்டை, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் இன்று முதல் நவம்பர் 1 ஆம் தேதி வரை கன மழை பெய்யக் கூடும் என்றும், அதேபோல் கடலோர மாவட்டங்களில் மணிக்கு 40 முதல் 50 கிமீ வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடம் என்பதால் மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் எனவும் இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும், கேரளாவில், திருவனந்தபுரம், கொல்லம், பத்தனம் திட்டா, ஆலம்புழா, கோட்டயம், இடுக்கி ஆகிய 6 மாவட்டங்களில் மிகப் பலத்த மழை பெய்யும் என்பதால் ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

;