india

img

“நீட்”, “மணிப்பூர்”, “அக்னிவீர்”, “அரசியல் சாசனம்” குடியரசுத் தலைவர் உரையின் போது எதிர்க்கட்சிகள் முழக்கம்

புதுதில்லி, ஜூன் 27- 18ஆவது மக்களவை கூட்டத் தொடர் கடந்த 24 அன்று தொடங்கிய நிலையில், வியாழனன்று இரு அவைகளின் கூட்டு கூட்டத்தில் குடி யரசுத் தலைவர் திரவுபதி முர்மு உரை யாற்றினார். அவரது உரையில்:

1.60 ஆண்டுகளுக்கு பின் தொடர்ந்து 3ஆவது முறையாக ஒரே  அரசை மக்கள் தேர்வு செய்துள்ள னர். மக்களின் இந்த முடிவு இந்தி யாவை வளர்ச்சி அடைந்த நாடாக மாற்றுவதற்கான நம்பிக்கை ஆகும். இது இந்தியாவை உலகின் 3ஆவது பெரிய பொருளாதாரமாக மாற்றும்.

2.பிரதமர் கிசான் சம்மான் நிதி யின் கீழ் அரசு ரூ.3.20 லட்சம் கோடி யை விவசாயிகளுக்கு வழங்கியுள்  ளது. புதிய ஆட்சிக் காலம் தொடங்கி யதில் இருந்து விவசாயிகளுக்கு 20,000 கோடி ரூபாய்க்கு மேல் நிதி விடுவிக்கப்பட்டுள்ளது.

3. பெண்களுக்காக பல்வேறு சுயதொழில் திட்டங்கள் அமல்படுத்தப் பட்டுள்ளன.

4. கடந்த 10 ஆண்டுகளில் 25 கோடி மக்கள் ஏழ்மையில் இருந்துவிடுவிக்கப்பட்டுள்ளனர். இது அரசின் திட்டங்களால் சாத்தியமானது.

5.வடகிழக்கு மாநிலங்களின் வளர்ச்சிக்காக, கடந்த 10 ஆண்டுகளில் அரசு பட்ஜெட் ஒதுக்கீட்டில் 4 மடங்குக்கு மேல் நிதியை உயர்த்தியுள்ளது. வடகிழக்கில் அமைதியை ஏற்படுத்த அரசு தொடர்ந்து செயல்பட்டு வருகிறது.

6. தமிழ்நாடு, உத்தரப்பிரதேசத்தில் பாதுகாப்புத் துறை தொழிற்பே ட்டைகள் அமைக்கப்படுகின்றன. பாதுகாப்புத்துறை சார்ந்த ஏற்றுமதியில் அதிகரித்து வருகின்றன.

7. இன்று ஜிஎஸ்டி இந்தியாவின் பொருளாதாரத்தை முறைப்படுத்தவும், வர்த்தகம் மற்றும் வணிகத்தை எளிதாக்கவும் உதவுகிறது. ஏப்ரல் மாதத்தில் முதல் முறையாக ஜிஎஸ்டி வசூல் ரூ.2 லட்சம் கோடியைத் தாண்டியுள்ளது. இதனால்மாநிலங்களின் லாபம் அதிகரித்துள்ளது.

8.ஜூலை முதல் புதிய குற்றவியல்சட்டங்கள் அமல்படுத்தப்படும். இனிதண்டனை அல்ல, புதிய சட்டங்கள் மூலம் நியாயம் கிடைக்கும்.

9.தேர்வு முறைகேடுகளை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. தேர்வு முறைகேடுகளில் ஈடுபடுவோருக்கு கடும் தண்டனை வழங்க சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. இந்தியாவில் 2036இல் ஒலிம்பிக் போட்டியை நடத்த ஏற்பாடு செய்யப்படும்.

10. சிஏஏ சட்டத்தின் கீழ் அகதிகளுக்கு குடியுரிமை வழங்கும் நடவடிக்கை அரசு தொடங்கியுள் ளது.  

இவ்வாறு அவர் பேசினார்.

எதிர்க்கட்சிகள் முழக்கம்

குடியரசுத் தலைவர் வடகிழக்கு மாநிலங்கள் குறித்து பேசிய பொழுது “மணிப்பூர், மணிப்பூர்” என்றும், மருத்துவக்கல்லூரி குறித் தும், தேர்வு முறைகள் குறித்தும் பேசும் போது “நீட்.. நீட்” என எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கோஷம் எழுப்பி னர். பாதுகாப்புத் துறை குறித்து பேசும்போது “அக்னிவீர், அக்னிவீர்” என முழக்கம் எழுப்பினர். மேலும்  “பெரும்பான்மை பலத்துடன் கூடிய ஆட்சியை மக்கள் தேர்ந்தெடுத்துள் ளனர்” என்று குடியரசுத் தலைவர் கூறியபோது எதிர்க்கட்சிகள் முழக்கம் எழுப்பினர்.

தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய கதைகளே மீண்டும்!
சு.வெங்கடேசன் எம்.பி., விமர்சனம்

நாடாளுமன்றத்தில் குடியரசு தலைவர் ஆற்றிய உரையை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் விமர்சித்துள்ளார்.  தனது டுவிட்டர் எக்ஸ் பக்கத்தில், “குடியரசு தலைவர் அவர்களே,  உங்கள் உரை இந்த ஆட்சியாளர்கள் தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய கதைகளாகவே உள்ளன. அந்தக் கதைகளைத்தானே மக்கள் நம்பவில்லை. உங்கள் கைகளில் பெரும்பான்மையைத் தரும் நம்பிக்கை எங்களுக்கு இல்லை என்பதைத்தான் மக்கள் தெரிவித்துள்ளனர்” எனக் கூறியுள்ளார்

குடியரசுத் தலைவர் உரையிலும் ‘அவசரநிலை பிரகடனம்’ : காங்கிரஸ் எம்.பி.க்கள் கடும் எதிர்ப்பு

1975 ஜூன் 25 அன்று இந்தியாவில் அமல்படுத்தப்பட்ட அவசரநிலை பிரகடனம் (எமர்ஜென்சி) குறித்து பிரதமர் மோடி செய்தியாளர்களிடம் பேசினார். மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா நாடாளுமன்ற தீர்மானம் நிறைவேற்றினார். இந்நிலையில், குடியரசுத் தலை வர் திரவுபதி முர்மு  உரையிலும்  அவசரநிலை பிரகடனம் இடம்பெற்றது.

அவர் பேசுகையில், “இன்னும் சில மாதங்களில் இந்தியா குடியரசு நாடாக 75 ஆண்டுகள் நிறைவு செய்ய உள்ளது. ஆனால் இந்திய அரசியலமைப்பு கடந்த பத்தாண்டுகளில் அனைத்து சவால்களையும், சோதனைகளையும் தாங்கி நிற்கிறது. நாட்டில் அரசியல் சாசனம் அமல்படுத்தப்பட்ட பிறகு, அரசியல் சாசனத்தின் மீது பல தாக்குதல்கள் நடந்துள்ளன. 1975 ஜூன் 25 அன்று இந்தியாவில் அமல்படுத்தப்பட்ட அவசரநிலை பிரகடனம்  அரசியல் சாசனத்தின் மீதான நேரடித் தாக்குதலாகும்.  ஆனால் அத்தகைய சக்திகளுக்கு எதிராக நாடு வெற்றி கண்டது. இந்திய அரசியலமைப்பை வெறும் நிர்வாக ஊடகமாக மாற்ற முடியாது” எனக் கூறினார். அவசரநிலை பிரகடனம் குறித்து தனது உரையில் குடியரசுத் தலைவர் குறிப்பிட்டதற்கு காங்கிரஸ் எம்.பி.க்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

 

;