india

img

இந்தியா ஒமைக்ரான் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 653 ஆக உயர்வு

இந்தியாவில் ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 653 ஆக உயர்ந்துள்ளது.
தென்னாப்பிரிக்காவில் முதன் முதலில் கண்டறியப்பட்ட ஒமைக்ரான் வைரஸ் பரவல் இந்தியாவிலும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இன்று காலை  நிலவரப்படி ஒமைக்ரான் வைரஸால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 653 ஆக உயர்ந்துள்ளது   இதுவரை 186 பேர் சிகிச்சைக்கு பின்  ஒமைக்ரான் பாதிப்பில் இருந்து மீண்டுள்ளனர்.  
அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 167 பேரும், டெல்லியில் 165 பேர் ஒமைக்ரான் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். குஜராத் 49, ராஜஸ்தான் 46, தெலங்கானா 55, கர்நாடகாவில் 31, கேரளாவில் 57 பேர், ஒமைக்ரான் வைரஸ் தொற்றுக்கு ஆளாகி உள்ளனர்.
தமிழ்நாட்டில் 34 பேர் ஒமைக்ரான் பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.  இந்தியாவில் மொத்தம் 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் ஒமைக்ரான் வைரஸ் பரவியுள்ளது குறிப்பிடத்தக்கது.