india

img

இந்த பூமி எவனுக்கும் , அவன் அப்பன் வீட்டு சொத்து கிடையாது..!  -கார்த்திக் சுப்பராஜ் 

மோடி அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த நாட்டின் பல பகுதிகளில் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக அசாம் உள்ளிட்ட வடகிழக்கு மாகாணங்களில் போராட்டம் தொடர்ந்து தீவிரம் அடைந்து வருகின்றன.  தில்லி ஜாமியா பல்கலைக்கழகம் , அலிகார் முஸ்லீம் பல்கலைக்கழகம், ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த மாணவர்கள் இந்த சட்டத்திற்கு எதிராக போராடி வருகின்றனர். ஜாமியா பல்கலைக்கழகத்தில் உரிய அனுமதி இன்றி நுழைந்த காவல்துறையினர் மாணவிகளை பாலியல் ரீதியாக துன்புறுத்திய தோடு தடியடி தாக்குதலையும் மேற்கொண்டனர். காவல்துறையின் நடவடிக்கைக்கு பல்கலைக்கழக துணைவேந்தர் கண்டனம் தெரிவித்துள்ளார். இந்நிலையில் தமிழ் திரைப்பட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் தனது டுவிட்டரில் தனது கண்டனத்தை பதிவிட்டுள்ளார். அதில் 
குடியுரிமை திருத்த சட்டம்  தீவிரமாக தவறாகவும் மதச்சார்பின்மைக்கு எதிராகவும் தெரிகிறது. 
இந்தியாவை மதச்சார்பற்ற நாடாக வைத்திருப்போம்
caaக்கு வேண்டாம் என்று சொல்லுங்கள்
NRCக்கு வேண்டாம் என்று சொல்லுங்கள்
மாணவர்கள் மீதான போலீசார் வன்முறைக்கு கண்டனம் சொல்லுங்கள் இந்த பூமி எவனுக்கும் அவன் அப்பன் வீட்டு சொத்து கிடையாது என்று தனது கோபத்தை வெளிப்படுத்தி உள்ளார்.
 

;