india

img

செப்டம்பர் 12 ஆம் தேதி நீட் நுழைவுத் தேர்வு - ஒன்றிய கல்வி அமைச்சர் 

மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு செப்டம்பர் 12 ஆம் தேதி நடைபெறும் என ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது, மேலும், இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை ஒன்றிய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் இணையத்தில் வெளியிட்டுள்ளார். 
அதில், நாடு முழுவதும், மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு வரும் செப்டம்பர் 12 ஆம் தேதி நடைபெறும். கொரோனா தடுப்பு நடவடிக்கை வழிமுறைகளைப் பின்பற்றும் விதமாகத் தேர்வு நடக்கும் நகரங்களின் எண்ணிக்கை 155லிருந்து 198 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. தேர்வு எழுத வரும் மாணவர்களுக்குத் தேர்வு மையங்களில் முகக்கவசம் வழங்கப்படும்.  மேலும், தேர்வு முகமை இணையதளத்தில் நாளை மாலை 5 மணி முதல் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

;