india

img

மத ரீதியாக வெறுப்புப் பேச்சு கிரிக்கெட் விளையாட்டையும் விட்டுவைக்காத மோடி: ரசிகர்கள் கண்டனம்

இதுவரை நடைபெற் றுள்ள மூன்று கட்ட  தேர்தலில் “இந் தியா” கூட்டணிக்கு ஆதர வான சூழல் உள்ளதாக தக வல் வெளியாகியுள்ளதால், பிரதமர் மோடி தனது வெறுப்  புப் பேச்சை மேலும் தீவிரப் படுத்தியுள்ளார். வெறுப்புப் பேச்சு தொடர்பாக மோடி உள்ளிட்ட பாஜகவினர் மீது  புகார் அளித்தாலும், தேர்தல்  ஆணையம் கண்டுகொள்வ தில்லை. 

இந்நிலையில் மே 7 அன்று மத்தியப்பிரதேச மாநி லம் தார் பகுதியில் நடை பெற்ற பிரச்சாரக் கூட்டத்தில்  கிரிக்கெட் விளையாட்டை வைத்தும் மோடி மதரீதியாக வெறுப்புப் பேச்சை கக்கி யுள்ளார். தேர்தல் பிரச்சா ரத்தில் அவர் கூறியதா வது: 

“காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் இந்திய கிரிக்கெட் அணியில் யார் இருக்க வேண்டும் என்பதை மத  அடிப்படையில் முடிவு செய் வார்கள். விளையாட்டிலும் சிறுபான்மையினருக்கு முன்  னுரிமை அளிப்பதே அவர்  களின் நோக்கம்” என பேசி னார். பிரதமர் மோடியின் இந்த வெறுப்புப் பேச்சிற்கு “இந்தியா” கூட்டணிக் கட்சி கள் உட்பட நாடு முழுவதும்  கண்டனம் குவிந்து வரும் நிலையில், அரசியல் பின் புலம் இல்லாத கிரிக்கெட் ரசிகர்களும் மோடிக்கு எதி ராக கண்டனக் குரல் எழுப்பி வருகின்றனர்.

காவி ஜெர்சியால் பாஜகவிற்கு கடும் எதிர்ப்பு

9ஆவது சீசன் டி-20 உலகக் கோப்பை கிரிக்கெட் மேற்கு இந்தியத் தீவுகள் மற்றும் அமெ ரிக்கா நாடுகளில் கூட்டாக நடை பெறுகிறது. இந்த தொடர் ஜூன் 1  அன்று தொடங்கும் நிலையில், தொடரில் பங்கேற்கும் 15 நாடு களும் அணி வீரர்கள் விபரம் மற்றும் ஜெர்சியை (வீரர்களின் உடை) வெளியிட்டுள்ளன.

இந்நிலையில், இந்திய  அணி தனது உலகக்கோப்பைக் கான ஜெர்சியை 4 நாட்களுக்கு முன் வெளியிட்டது. ஜெர்சியை ஹெலிகாப்டர் சிறப்பு ஏற்பாடு  மூலம் இந்திய கிரிக்கெட் வாரி யம் (பிசிசிஐ) அறிமுகப்படுத்தி னாலும், இன்று வரை ரசிகர்கள் ஜெர்சிக்கு கண்டன கருத்து மூலம் பாஜகவை பந்தாடி வரு கின்றனர். காரணம் இந்திய அணியில் ஜெர்சியில் இதுவரை இல்லாத வகையில் 50% அள வில் “காவி வண்ணம்” அச்சி டப்பட்டுள்ளது. இதனால் சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் மீம்ஸ் மூலம் பிரதமர் மோடி  உள்  ளிட்ட பாஜகவினரை வறுத்தெ டுத்து வருகின்றனர்.

“மோடி உத்தரவிட பிசிசிஐ செயலாளரான அமித் ஷா மகன் ஜெய் ஷா கிரிக்கெட்டிற்குள் காவி யை கொண்டு  வருகிறார். இதை ஏற்க மாட்டோம்” என ரசிகர்கள் டிரெண்டிங் ஆகும் அளவிற்கு கமெண்ட் செய்து வரு கின்றனர். குறிப்பாக காவி வண்  ணம் காரணமாக இந்திய அணி யின் ஜெர்சியை ரசிகர்கள் கண்டு கொள்ளாமல் ஐபிஎல் பக்கம் சுழன்று வருகின்றனர். 

;